லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கூரையில் சடலமாக தொங்கிய மஞ்சரி.. அலறிய குடும்பம்.. கொந்தளித்த மக்கள்.. அதிகாரிக்கே இந்த நிலையா!

இளம் பெண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Google Oneindia Tamil News

லக்னோ: மேற்கூரையில் சடலமாக தொங்கிய மஞ்சரியை பார்த்ததும் குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அலறி அடித்து துடித்தனர். இந்த சம்பவம் உபியில் நடந்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண் அதிகாரி மஞ்சரியின் மரணம், தற்கொலையா, கொலையா என்ற சந்தேகத்தையும் கிளப்பி வருகிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மணியார் நகர் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் மணி மஞ்சரி ராய்.. இவருக்கு 27 வயதாகிறது.. இவர் திடீரென தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் மேற்கூரையில் இவரது சடலம் தொங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் குடும்பத்தினர் அலறிவிட்டனர்.

27 year old woman officer suicide in uttar pradesh

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று, மஞ்சரியின் ரூம் கதவை உடைத்து, பிறகு மேற்கூரையில் தொங்கி கொண்டிருந்த சடலத்தை மீட்டனர்.. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையும் ஆரம்பமானது.. அப்போதுதான் அந்த ரூமில் அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றினையும் கைப்பற்றினர்.

"பல்லியாவுக்கு வருவதற்காக டெல்லி, மும்பையிலிருந்து தப்பித்தேன்.. ஆனாலும் நான் ஏமாற்றப்பட்டேன்.. என் தவறான செயல்களே காரணம்.. ரொம்ப காலம் நான் ஏமாற்றப்பட்டேன்" என்று தெரிவித்துள்ளார்... இதனால் மஞ்சரி கடுமையான மன அழுத்தம், மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருச்சி சிறுமி எரிப்பு.. தலையில் காயம் இருக்காம்.. போஸ்ட்மார்ட்டத்தில் புது தகவல்.. கொன்றது யார்?திருச்சி சிறுமி எரிப்பு.. தலையில் காயம் இருக்காம்.. போஸ்ட்மார்ட்டத்தில் புது தகவல்.. கொன்றது யார்?

ஆனால், மஞ்சரியின் அப்பாவோ, மகளை யாரோ கொலை செய்துவிட்டனர், தற்கொலை என்று விவகாரம் மறைக்கப்படுகிறது, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என் பொண்ணு கோழை இல்லை" என்று குற்றஞ்சாட்டுகிறார். இதையடுத்து, இது கொலையா, தற்கொலையா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

English summary
27 year old woman officer suicide in uttar pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X