Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்க ஏரியாவில் நீ எப்படி பிரியாணி விற்கலாம்.. இளைஞரை சரமாரி தாக்கிய 3 பேர்.. ஷாக் வீடியோ

பிரியாணி விற்ற நபர் மீது 3 பேரை தாக்கி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: "என்ன சாதி நீ.. எங்க வந்து பிரியாணி விக்கிறே" என்று இளைஞர் ஒருவரை 3 பேர் கேள்வி கேட்டு சரமாரி தாக்கும் வீடியோ ஒன்று வெளியாகி கடுமையான அதிர்ச்சியை தந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் கவுமதபுத்தா மாவட்டம், ரபாபுரம் என்ற பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர் லோகேஷ்.. 43 வயதாகிறது.. பட்டியலினத்தை சேர்ந்தவர் என தெரிகிறது. தள்ளுவண்டியில் விஜிடபிள் பிரியாணியை தயாரித்து விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

43 year old up biriyani seller thrashed

இந்நிலையில், திடீரென ஒரு காரில் 3 பேர் இக்கடைக்கு வந்துள்ளனர்.. அங்கிருந்த கடையை ஆவேசமாக சூறையாடினர்.. 3 பேரும் லோகேஷை கன்னத்தில் அறைந்தும், சுவற்றில் மோதியும், சரமாரியாக தாக்கி உள்ளனர்.. அசிங்கமான வார்த்தைகளில் லோகேஷை திட்டியதுடன், சாதி ரீதியாகவும் மட்டமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமான வீடியோதான் தற்போது வெளியாகி உள்ளது.. "இந்த சாதியை சேர்ந்த நீ எப்படி பிரியாணி விற்கலாம்" என்று கேட்டு, 3 பேரும் அடித்து நொறுக்கியதில் பயந்து நடுங்கியபடி அடிவாங்குகிறார் லோகேஷ்.. மன்னிப்பு கேளுடா என்ற ஒரு குரலும் அந்த வீடியோவில் கேட்க முடிகிறது. இதில் லோகேஷ் படுகாயமடைந்தார்.. இது சம்பந்தமாக போலீசிலும் புகார் தந்தார்.

இதனடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.. லோகேஷை அடித்தவர்கள் யார் என்று தெரியவில்லை.. அவர்களை தேடி வருவதாக நொய்டா எஸ்பி தெரிவித்துள்ளார்.. ஆனால், சாதியை காரணம் காட்டி, நபரை 3 பேர் தாக்கிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருவதுடன், பெருத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+