புதருக்குள் 6 வயது பிஞ்சு.. ரத்தம் தோய்ந்த உடல்.. நாசம் செய்த கும்பல்.. ஒருத்தன் கூட சிக்கல.. ஷாக்!

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: புதருக்குள் இருந்து 6 வயது பிஞ்சுவை ரத்தம் தோய்ந்த உடலுடன் மீட்டுள்ளது போலீஸ்,.. இந்த குழந்தையை ஒரு கும்பல் நாசம் செய்துள்ளது.. ஆனால் பலாத்காரம் செய்து 4 நாட்கள் ஆகியும் குற்றவாளி ஒருத்தரையும் கைது செய்ய முடியவில்லை.. இதனால் போலீசார் திணறி வருகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் கர் முக்தேஸ்வர் என்ற பகுதி உள்ளது.. டெல்லியில் இருந்து 100 கி.மீ தூரத்தில் இந்த இடம் இருக்கிறது.. அங்கு வசித்து வந்தவள் அந்த சிறுமி.. கடந்த வியாழனன்று வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள்.

 6 yr old girl raped by a gang and extremely critical in up hospital

அப்போது பைக்கில் ஒருத்தர் வந்து குழந்தையை வண்டியில் ஏற்றி கடத்தி கொண்டு போய்விட்டார். பிறகு ஒரு மறைவான இடத்தில் வைத்து, அவரும், அவருடைய நண்பர்களும் அந்த குழந்தையை நாசம் செய்துள்ளனர்.. இதனிடையே குழந்தையை காணோம் என்று பெற்றோர் தேடி அலைந்தனர்.

பிறகு போலீசிலும் புகார் தந்தனர்.. அந்த சமயத்தில்தான் புதருக்குள் ரத்தம் தோய்ந்த உடைகளுடன் சிறுமியை போலீசார் மீட்டனர்.. இதை பார்த்ததும் பெற்றோர் கதறி துடித்தனர்.. உடனடியாக ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர்.. அப்போதுதான் குழந்தையை பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது.. உடனடியாக சிறுமிக்கு ஒரு ஆபரேஷனும் செய்யப்பட்டது.. ஆனால் இன்னும் குழந்தை குணமாகவில்லை.

நீண்ட நாட்கள் சிகிச்சை தேவை என்று டாக்டர்கள்சொல்கிறார்கள்.. தேவைப்பட்டால் இன்னொரு ஆபரேஷனும் செய்ய வேண்டி இருக்குமாம். ஆனால், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது... 4 நாட்கள் ஆகியும் போலீஸாரால் குற்றவாளிகளை இன்னமும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லையாம்..

எனினும் போலீஸ் இது தொடர்பாக 3 வரைபடங்களை வெளியிட்டிருக்கிறது.. சிறுமியின் வாக்குமூலம், மற்றும் பெற்றோரின் புகாரின்படி இந்த மேப் வரையப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது.. இப்போதைக்கு 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. ஆனாலும் குற்றவாளிகள் குறித்து ஒரே ஒரு க்ளூ கூட கிடைக்கவே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+