லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உ.பி.யில் நில அபகரிப்புக்காக கட்டப்பட்ட கொரோனா மாதா கோவில்... 5 நாட்களிலேயே இடித்து தரைமட்டம்!

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தை அபகரிப்பதற்காக கொரோனா மாதா கோவில் கட்டபட்டது. இந்த கோவில் தற்போது 5 நாட்களிலேயே இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

டெல்லியை அடுத்த நொயொடாவில் வசித்து வருபவர் லோகேஷ் குமார். இவருக்கும் உ.பி.யின் பிரதாப்கர் அருகே உள்ள சுகுல்புர் கிராமத்தில் நாகேஷ் குமார் ஶ்ரீவத்சவா, ஜெய் பிரகாஷ் ஶ்ரீவத்சவா ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பான லோகேஷ், நாகேஷ் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

A Controversy erupts over Corona mata temple in UP village

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி திடீரென சர்ச்சைக்குரிய இந்த நிலத்தில் கொரோனா மாதா கோவில் ஒன்றை கட்டினார் லோகேஷ். அத்துடன் ராதே ஷ்யாம் வர்மா என்பவரையும் இந்த கொரோனா மாதா கோவில் அர்ச்சகராக நியமித்தார்.

லோகேஷின் இந்த திடீர் செயலால் கோபமடைந்த நாகேஷ் மற்றும் ஜெய்பிரகாஷ் இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் நிலத்தை அபகரிக்கும் நோகத்துடன் லோகேஷ், கொரோனா மாதா கோயில் கட்டியது உறுதியானது. இதனையடுத்து நேற்று இந்த கோவில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இ-பதிவு செல்லாது.. தமிழ்நாட்டின் இந்த 5 பகுதிகளுக்கும் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.. கவனம் மக்களே!இ-பதிவு செல்லாது.. தமிழ்நாட்டின் இந்த 5 பகுதிகளுக்கும் பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.. கவனம் மக்களே!

ஏற்கனவே தமிழகத்தில் கோவையிலும் கொரோனே தேவி சிலையை வைத்து வழிபாடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

English summary
A Corona mata temple was constructed in a disputed site in UP Village. Now this temple was razed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X