எல்லாமே கப்சாவாம்.. மோடியின் பெயர் சூட்டப்பட்ட இஸ்லாமிய குழந்தை.. புகழுக்காக கோல்மால் செய்த தாய்!
Recommended Video
லக்னோ: பாஜக வெற்றி பெற்ற நாளில் தனது குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமிய பெண் குழந்தையின் பெயரை திடீரென மாற்றியுள்ளார்.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக இமாலய வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து பாஜகவின் பிரதமர் மோடி ஆட்சிக்கட்டிலில் மீண்டும் அமரும் வாய்ப்பு உறுதியானது. இதனை நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

குழந்தை
இந்நிலையில் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்த நாளில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கொண்டா பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு மோடி பெயர்
இந்த தகவல் அமீரகத்தில் பணியாற்றும் குழந்தையின் தந்தைக்கு தெரிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தனது குழந்தைக்கு நரேந்திர தாமோதர்தாஸ் என பெயர் சூட்டினர். இந்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

பாராட்டு
எதிர்க்கட்சிகள் மோடியின் அரசு இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் இஸ்லாமிய தம்பதி தங்களின் குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டியது பலரின் பாராட்டையும் பெற்றது.
|
உறவினர்கள் எதிர்ப்பு
இந்நிலையில் குழந்தையின் தாய் மைனாஸ் பேகம் தனது குழந்தையின் பெயரை முகமது அல்தாப் ஆலம் என மாற்றியுள்ளார். மோடியின் பெயரை வைத்ததற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குழந்தையின் பெயரை மாற்றியதாக கூறியுள்ளார்.

உறுதிப்படுத்திய மருத்துவர்கள்
இந்நிலையில் மைனாஸ் பேகம் குழந்தையின் பிறந்த தேதியை பொய்யாக பதிவு செய்தது தெரியவந்துள்ளது. அந்த குழந்தை மே 12-ம் தேதி உள்ளூர் மருத்துவமனையில்தான் பிறந்துள்ளது. இதற்கான ஆவணம் கிடைத்துள்ள நிலையில் பிரசவம் பார்த்த மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர்.

மோடி பெயர் - சர்ச்சை
23-ம் தேதி தேர்தல் முடிவு வெளியான அன்று குழந்தை பிறந்தது போன்று வெளியே கூறினால் புகழ்பெறலாம் என்ற நோக்கில் அந்த பெண் பொய் கூறியுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மோடியின் பெயரை குழந்தைக்கு வைத்த பெண் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
ஹாஸ்டலாக மாறும் வீடுகள்.. கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு! தமிழக அரசு கொடுத்த சூப்பர் சான்ஸ் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications