நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தரகர் சுட்டுக் கொலை... நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் பட்டப்பகலில் நடுரோட்டில் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவரை , இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிடிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஹரீஷ் பச்சோரி என்பவர் ரியல் எஸ்டேட் தரகராக வேலை செய்து வந்தார். இவர் ஆக்ராவில் நேற்று மதியம் சாலையில் ஒருபக்கத்தில் இருந்து மறுபக்கம் செல்ல, வாகன போக்குவரத்திற்கு நடுவே காத்துக் கொண்டிருந்தார். அப்படியே செல்போனில் அவர் பேசிக் கொண்டு சாலையில் வாகனங்கள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தார்.

 A property dealer’s murder on a busy Agra intersection , caught on cctv

அந்த நேரத்தில் ஹரீஷை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் திடீரென வந்து இரண்டு பேர் அவரை வழிமறித்து நின்றனர். இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் திடீரென கைத் துப்பாக்கியை எடுத்து ஹரிஷை நோக்கி சுட்டார்.

துப்பாக்கி குண்டு ஹரிஷின் வயிற்றில் பாயந்த்து ஹரிஷ் தடுமாறியபடியே அவனை பிடிக்க முயற்சித்துள்ளார். இதில் துப்பாக்கியால் சுட்டவர் கீழே விழுந்தார். எனினும் மீண்டும் எழுந்து, பின்னர் 2 முறை சுட்டார். பின்னர் கூட்டாளியோடு தாங்கள் வ்ந்த இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

 A property dealer’s murder on a busy Agra intersection , caught on cctv

பலத்த காயமடைந்த ஹரிஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகைள தேடி வருகின்றனர். கொலைக்கான காரணங்கள் குறித்து தெரியவில்லை. கொலை நடந்த இடம் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் நடந்த சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன,.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+