9 ஆண்டு நட்பு.. அகிலேஷ் யாதவை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்! 2 பேருக்கும் இப்படி ஒரு உறவா? சுவாரசியம்
லக்னோ: நடிகர் ரஜினிகாந்த் நேற்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்நிலையில் தான் இன்று நடிகர் ரஜினிகாந்த் அகிலேஷ் யாதவை திடீரென்று சந்தித்த நிலையில் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இது திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடி வருகிறது. இதற்கிடையே தான் நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார்.

அதோடு தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்ததோடு, பத்ரிநாத் கோவிலிலும் வழிபாடு செய்தார். அதன்பிறகு அவர் இமயமலை பயணத்தை முடித்து திரும்பினார். நேற்று முன்தினம் உத்தர பிரதேசம் சென்றார்.
நேற்று உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அதன்பிறகு உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியாவுடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தார். அதன்பிறகு நேற்று மாலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.

முன்னதாக யோகி ஆதித்யநாத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார். இதுதொடர்பாக போட்டோ, வீடியோ இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. இத்தகைய சூழலில் இன்று நடிகர் ரஜினிகாந்த் லக்னோவில் உள்ள வீட்டில் வைத்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.
அப்போது வீட்டில் இருந்த அகிலேஷ் யாதவின் தந்தையான மறைந்த உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் போட்டோவுக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து சந்திப்பை முடித்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், ‛‛கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு டந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யதாவுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தேபோது அவர் இல்லை. அதனால் இப்போது சந்தித்தேன்'' என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications