சோதனை செய்தது உண்மைன்னா.. நாட்டின் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?.. அகிலேஷ்
லக்னோ: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே பல்வேறு விமான நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டு அவர்களில் யாருக்கும் கொரோனா இல்லாத நிலையில் நாட்டின் முதல் கோவிட் 19 பாதித்த நபர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத போதே பல்வேறு விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் சோதனை நடத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் எனது கேள்வி என்னவெனில் விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை அர்த்தமுள்ளது, தீவிரமானது என்பதுதான். அனைவரையும் தீவிரமாக பரிசோதனை செய்தது உண்மையெனில் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
நிச்சயம் தீவிர சோதனை செய்திருந்தால் நாடு நிச்சயம் பலன் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 558 ஆக உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications