எனது உயிருக்கு ஒரு பாஜக தலைவரால் ஆபத்து.. என்னை கொல்ல சதி.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு புகார்
லக்னோ: எனது உயிருக்கு பாஜக தலைவர்களால் ஆபத்து என தொலைபேசி அழைப்பு வந்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரப்பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அகிலேஷ் யாதவ், நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது குறித்து கன்னோஜில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் குறுக்கிட்டு நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதற்காக என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். அவர் கூறியது அகிலேஷுக்கு கேட்காததால் அந்த இளைஞரை அருகில் அழைத்தார். அப்போது அந்த இளைஞர் ஜெய்ஸ்ரீராம் என முழங்கினார்.

நீங்கள் பாஜகவை சேர்ந்தவரா என கேட்டார் அகிலேஷ். அதற்கு அந்த இளைஞர் ராமர், கிருஷ்ணர், விஷ்ணு, சிவன் ஆகிய அனைத்து தெய்வங்களையும் நான் போற்றுவேன் என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து போலீஸ் அதிகாரியிடம் அகிலேஷ் புகாராக கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் இரு நாட்களுக்கு முன்னர் பாஜ தலைவர் ஒருவர் என்னை போனில் மிரட்டினார். தற்போது அந்த இளைஞர் பாதுகாப்பு வளையத்தை தாண்ட முயற்சித்துள்ளார்.
அவர் என்னை கொல்ல முயற்சிக்கலாம். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். எந்த பிரிவின் கீழ் அவர் மேல் வழக்கு பதிவு செய்ய உள்ளீர்கள் என கேட்டார். அந்த நபர் குக்ராபூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் சுக்லா என தெரியவந்தது. அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்பூரில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications