கவர்ச்சியோ கவர்ச்சி.. அந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும், மஞ்சள் கலர் சேலையும்.. அல்லோகல்லப்படும் இணையம்

: மஞ்சள் சேலை அணிந்த பெண்ணின் போட்டோ இணையத்தில் வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உபியில் அடுத்தடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடக்க உள்ள நிலையில், ஒரு பெண்ணின் போடோவை இணையவாசிகள் போட்டி போட்டுக் கொண்டு வைரலாக்கி வருகின்றனர்.

கடந்த எம்பி தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உபியில் கிடைத்த அதிகமான தொகுதிகளே அடித்தளமிட்டன.. 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பாஜக...

இப்போதும் மறுபடியும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், உபியை தன்னுடைய கோட்டையாக கையில் இறுக்கிப்பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்பதை பாஜக மேலிடம் நன்றாக உணர்ந்துள்ளது.

பாஜக

பாஜக

அதனால்தான், இந்த முறையும் பாஜக தலைவர்கள் உபியில் முகாமிட்டு வந்தனர்.. இதில் அமித்ஷா கூடுதலாக கவனம் செலுத்தி வந்தது மேற்கு உத்தரபிரதேசத்தில்தான்.. மேற்கு உத்தர பிரதேச பொறுப்பையும் அமித்ஷா நேரடியாகவே ஏற்றுக் கொண்டுள்ளார்... இதற்கு காரணம், மாநிலத்தின் பல பகுதிகளை போலவே, மேற்கு உபியிலும் அகிலேஷுக்கு ஆதரவுகள் பெருகி கிடப்பதுதான்.. அதனாலேயே உள்துறை அமைச்சர், வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

 அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு

அடுத்தக்கட்ட வாக்குப்பதிவு

இப்போது 7 கட்டமாக இங்கு தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.. நேற்றைய தினம் வரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.. வரும் மார்ச் 3ம் தேதியுடன் 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட தேர்தல் முடிவுற்று மார்ச் 10ம் தேதி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன... இப்படிப்பட்ட அரசியல் பரபரப்பில்தான், மஞ்சள்சேலை அணிந்த பெண்ணின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அது பழைய போட்டோதான்.. இப்போது நெட்டிசன்கள் அதை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.. இதற்கு என்ன காரணம்? யார் அந்த பெண்?

 வாக்குச்சாவடி

வாக்குச்சாவடி

இவர் பெயர் ரீனா திவிவேதிதான்.. இவர் ஒரு அரசு ஊழியர், 35 வயதாகிறது.. இவரது சொந்த ஊர் தியோரியா... உபி மாநில பொதுப் பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். அதனால், கடந்த 2019-ல் நடந்த தேர்தலின் வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி ஒன்றில் இவர் பணியாற்ற நியமிக்கப்பட்டார்.. குறிப்பாக, உ.பியில் நடந்த 5வது கட்ட வாக்குப் பதிவின்போது தான் இவர் வெளி உலகுக்கு அறிமுகமானார்.. அன்றைக்குதான் இவர் மஞ்சள் கலர் சேலை அணிந்து வந்தார்..

 மஞ்சள் நிற சேலை

மஞ்சள் நிற சேலை

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. கண்களில் கூலிங்கிளாஸுடன் இவர் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பூத்திற்குள் நுழைந்தார்.. சொன்னால் நம்ப மாட்டீங்க.. அந்த பூத்தில் அன்றைய தினம் 100சதவீத வாக்குப் பதிவாம்.. அன்றைய தினமே ரீனா ஃபேமஸ் ஆகிவிட்டார்.. "கவர்ச்சிகரமான உடையுடன் கூடிய இந்த அதிகாரியைப் பாருங்க' என்று பலரும் இவர் போட்டோவை ஷேர் செய்தனர்.. அதேசமயம், இவர் அழகாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக இப்படியா போட்டோவை ஷேர் செய்வது என்ற எதிர்மறை விமர்சனமும் அப்போது எழுந்தது.. இருந்தாலும் ரீனா இதையெல்லாம் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக சந்தோஷத்தையே வெளி்படுத்தினார்.

 குழந்தைகள்

குழந்தைகள்

ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டீர்களே, இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் அப்போது இவரை கேட்டனர்.. அதற்கு ரீனா, எனக்கு 32 வயதாகிறது. சீக்கிரமே கல்யாணமாகி விட்டது. குழந்தைகளும் இருக்காங்க.. நான் அரசுப் பணியாளர். பொதுப்பணித்துறையில் வேலை பார்க்கிறேன்.. வழக்கமாக என்னுடன் பணியாற்றும் சக ஊழியர் எடுத்த போட்டோதான்... திடீர்னு வைரலாயிடுச்சு.. எனக்கே இது ஆச்சரியம்தான்.. இருந்தாலும் ஃபேமஸ் ஆகிவிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.. நம்மால் மற்றவர்களுக்கு சந்தோஷம் என்றால் நமக்கும் சந்தோஷம்தானே" என்று கூறி சிரித்தார் ரீனா.

 ரீனா சிரிப்பு

ரீனா சிரிப்பு

அதுமட்டுமல்ல, இந்த போட்டோவை போலவே, கடந்த 2014 தேர்தலின்போதும் கூட ரீனாவின் போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.. நல்ல ஆரோக்கியமான சாப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனமாக இருப்பாராம் ரீனா. அதுதான் அவரது அழகுக்கு முக்கியக் காரணம் என்றும் சொல்லியிருந்தார்.. இப்போது விஷயம் என்னவென்றால், உபியில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மறுபடியும் இந்த மஞ்சள் கலர் சேலை இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது...

 வைரல் வீடியோ

வைரல் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பு முதல் தினமும் ஏதாவது ஒரு போட்டோ, வீடியோவை இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்றம் செய்து கொண்டே இருக்கிறார்.. இவருக்கு இன்ஸ்டாவில் 2லட்சம் பாலோயர்ஸ்கள் இருக்கிறார்களாம்.. இவரது அன்றாட நிகழ்வுகளை ஷேர் செய்து, அனுபவங்களையும் அதில் பதிவிட்டு வருவதால்.. ரீனாவின் அத்தனை பதிவுகளும் வைரலாகி கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+