லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 ஆண்டுகளாக சிறுமி “டிஜிட்டல் பலாத்காரம்”! கம்பி எண்ணும் ரைடர்! அதென்ன ’டிஜிட்டல்’? திகைத்த போலீஸ்!

Google Oneindia Tamil News

லக்னோ : உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகில் 17 வயது சிறுமிக்கு 7 ஆண்டுகளாக டிஜிட்டல் முறையில் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த 81 வயதான முதியவர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன என்பது குறித்தும் பார்க்கலாம்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பெரும்பாலும் தங்களுக்கு தெரிந்த உறவினர்கள், நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

உத்திரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் டிஜிட்டல் கலாச்சாரம் என்ற பெயரில் போலீசாரை நிகழ்ச்சியில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே தாய் தந்தையரை இழந்த 17 வயது சிறுமி ஒருவரை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் எடுத்து வளர்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 87 வயதான மாரீஸ் ரைடர் என்பவர் அந்தச் சிறுமி பார்ப்பதற்கு தனது பேத்தியை போல் இருப்பதாக கூறி பாசத்துடன் பழகி வந்துள்ளார். ஆனால் கடந்த 7 வருடங்களாக சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அந்த முதியவர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

இந்நிலையில் முதியவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை நேரில் பார்த்த சிறுமையின் வளர்ப்பு தந்தை அவரை எச்சரித்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாத அவர், வளர்ப்பு தந்தையையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதோடு காவல்துறையில் தனக்கு ஏராளமான நண்பர்கள் இருப்பதால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதில் தனது பாதுகாப்பில் வசிக்கும் சிறுமியை முதியவர் தொடர்ந்து 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து கொண்டதாகவும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.

டிஜிட்டல் பலாத்காரம்

டிஜிட்டல் பலாத்காரம்

இது தொடர்பாக அந்த முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் ஊடகங்களிடம் கூறுகையில்," கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக 80 வயது முதியவர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ளார் அவர் மீது பாலியல் வன்கொடுமை போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பாக அந்தச் சிறுமியை முதியவர் டிஜிட்டல் முறையில் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது எங்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 80 வயது முதியவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 14 நாட்கள் சிறையில் அடைத்துள்ளோம்.

டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன?

டிஜிட்டல் பலாத்காரம் என்றால் என்ன?

இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது டிஜிட்டல் பலாத்காரம் என்ன என்பது குறித்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆங்கிலத்தில் டிஜிட் என்றால் கை, கால் விரல்களை குறிக்கிறது. அதாவது ஒருவரது அந்தரங்க உறுப்புகளுக்குள் ஒருவரின் அனுமதி இன்றி வலுக்கட்டாயமாக விரல்கள் அல்லது கால் விரல்களை நுழைப்பதை டிஜின் என்றும் டிஜிட்டல் பலாத்காரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய டிஜிட்டல் பலாத்காரத்தை செய்த குற்றவாளிக்கு குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் அல்லது பத்தாண்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police have arrested an 81-year-old man for digitally harassing a 17-year-old girl near Noida in Uttar Pradesh for seven years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X