ஒரு புறாவுக்கு அக்கப்போரா? கல்யாண வீடே ரணகளமாயிடுச்சே.. ஒரு உயிரும் போயிடுச்சே.. ஆமா, அதென்ன ரசகுல்லா
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண வீட்டில் 'ரசகுல்லாவை' எடுத்து சாப்பிட்டதால் ஏற்பட்ட சண்டையில் பெண் வீட்டை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமண வீடுகளில் கொண்டாட்டங்களை போலவே சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. எங்கிருந்து யார் பஞ்சாயத்தை தொடங்குவார்கள் என்றே தெரியாது. அப்படி திடீரென ஏதாவது ஒரு பிரச்சனை மாப்பிள்ளை வீட்டிலிருந்தோ, பெண் வீட்டிலிருந்தோ தொடங்கிவிடும். இப்பிரச்சனைகள் தொடக்கத்தில் சிரிப்பாக இருந்தாலும் இறுதியில் மிகவும் சீரியஸான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு பஞ்சாயத்து ரசகுல்லாவிலிருந்து தொடங்கியிருக்கிறது.
ஹரியானாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக வரன் பார்த்து வந்துள்ளனர். அப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் வரன் அமைந்திருக்கிறது. வழக்கமான முறைப்படி முதலில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டு வந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் பெண் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் அங்கு வைத்து திருமண தேதியை முடிவு செய்து திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.

திருமணம்
இதனையடுத்து நேற்று ஆக்ராவில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக ஹரியானாவிலிருந்து ஆக்ராவுக்கு பெண் வீட்டாரின் உறவினர்கள் பலர் வந்திருக்கின்றனர். பெண்ணின் சொந்த ஊர் கிரமாப்புற பகுதி என்பதால் அவர்கள் ஊரிலிருந்து வந்தவர்களுக்கு இந்த திருமணம் பிரமாண்டமானதாக இருந்திருக்கிறது. இப்படி இருக்கையில் இரவு உணவில் ஸ்பெஷலாக ரசகுல்லா பரிமாறப்பட்டிருக்கிறது. ரசகுல்லாவை யார்தான் விரும்ப மாட்டார்கள்? எனவே திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் ரசகுல்லா மீது ஒரு கண் இருந்திருக்கிறது. சாப்பிட்டு முடித்த பின்னரும் ரசகுல்லா வாளியை தேடி தேடி காலி செய்துள்ளனர்.

ரசகுல்லா
இதனால் பாதி பந்தியிலேயே ரசகுல்லாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. மறுபுறம் சாப்பிட அமர்ந்திருந்தவர்கள் ரசகுல்லா கூட முழுசா வைக்க மாட்டீங்களா என கேள்வியெழுப்ப தொடங்கிவிட்டனர். இதனையடுத்து ரோஷமடைந்த மாப்பிள்ளை வீட்டார் வெளியிலிருந்து மீண்டும் கூடுதலாக ரசகுல்லாக்களை வாங்கி வந்து பரிமாறியுள்ளனர். இப்படி இருக்க பெண் வீட்டாரும் ரசகுல்லா வாளிக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது இத்தனை பேர் பாதுகாப்பு இருக்கும்போதே ரஜத் எனும் இளைஞர் ஒருவர் ரசகுல்லாவை அசால்ட்டாக எடுத்து சாப்பிட்டுள்ளார்.

சண்டை
இதனை கண்ட பெண் வீட்டு தரப்பினர் "ஏம்பா இப்படி பண்றீங்க. இங்க ஏற்கெனவே ரசகுல்லாவுக்கு சண்ட போயிட்டு இருக்கு, இதுல நீ வேறயா?" என கேள்வியெழுப்பியுள்ளனர். அவ்வளவுதான் சண்டைக்கான புள்ளி விழுந்துவிட்டது. ரஜத் தனது தரப்பில் ஆட்களை கூப்பிட பெண் வீட்டாரும் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தனர். ஆனால் ரஜத் தரப்பினர் கையில் கம்புடன் வந்திருந்ததால் அவர்களை பெண் வீட்டாரால் சமாளிக்க முடியவில்லை. சண்டை முடிவில் பெண் வீட்டு தரப்பில் 50 வயதான ரன்வீர் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட ரஜத் குழுவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

வழக்குப்பதிவு
சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் ரண்வீர் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மெயின்புரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், "இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். கடைசியாக அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய ரசகுல்லாவை யாரும் சாப்பிடாததால் கீழே கொட்டப்பட்டுள்ளது.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications