பாஜக இதை எதிர்பார்த்தே இருக்காதே.. உ.பியில் இருந்து வந்த எச்சரிக்கை மணி! காங்கிரஸ் சிக்ஸர் அடிக்குதே
லக்னோ: மக்களவைத் தேர்தலில் அமேதியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் ரேபரேலியில் இருந்து பிரியங்கா காந்தி வதேரா போட்டியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் ரேபரேலியின் ராகுல் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும்.
இங்கே மீண்டும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ராவை களமிறக்குமாறு உத்தரப் பிரதேச காங்கிரஸ் சனிக்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைமையை வலியுறுத்தி உள்ளது.

நேற்று இதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆனால் காங்கிரஸ் தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
அமேதி மற்றும் ரேபரேலியில் இருந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா இருவருக்கும் டிக்கெட் வழங்க வேண்டும் என்று உ.பி.யில் கட்சி விவகாரங்களுக்கான ஏஐசிசி பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே மற்றும் மாநில சிஎல்பி தலைவர் ஆராதனா மிஸ்ரா ஆகியோர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடம் வலியுறுத்தினர்.
கடந்த முறை ரேபரேலியில் சோனியா காந்தி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இந்த முறை அவர் தேர்தலில் நிற்கவில்லை . இதனால் அங்கே பிரியங்கா காந்தி தற்போது களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. அதேபோல் 2004, 2009, 2019 வரை ராகுல் காந்தி அமேதியில் வென்றார். கடந்த முறை இவர் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார்.
இந்திய நிலையில் இந்த முறை வயநாட்டில் மட்டுமே ராகுல் காந்தி போட்டியிடுவார்.. அமேதியில் போட்டியிட மாட்டார் என்று செய்திகள் வந்தன. ஆனால் அமேதியில் மீண்டும் அவரை களமிறக்க வேண்டும் என்ற உத்தரப் பிரதேச காங்கிரஸ் சனிக்கிழமையன்று காங்கிரசின் கட்சியின் உயர்மட்டத் தலைமையை வலியுறுத்தி உள்ளது.
இறுதி முடிவு; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற CEC கூட்டத்தில், இவர்கள் இருவரும் உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும். அப்படி செய்தால் தேர்தல் முடிவுகள் மாறும். இதற்கான முடிவை மல்லிகார்ஜுன கார்கேவிடம் விடுகிறோம் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாம். ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடுவாரா இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஓரிரு நாட்களில் முடிவு எடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கே இரண்டு தலைவர்களும் போட்டியிடும் பட்சத்தில் அது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவிற்கு வாக்கு ரீதியாக, அரசியல் ரீதியாக உத்தர பிரதேசத்தில் சவாலாக மாறலாம்.
பாஜகவிற்கு சிக்கல்: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லோக்சபா தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதிக்கு மற்றொரு வேட்பாளரை அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு திடீரென சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் இங்கே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது. இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இது உத்தர பிரதேசத்தில் மொத்தமாக அரசியல் நிலவரத்தையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அங்கே "ஆலு பெல்ட்" என்று அழைக்கப்படும் உருளைக்கிழங்கு பெல்ட் முழுக்க பாஜகவிற்கு எதிராக திரும்பும் நிலை உள்ளது.
கன்னோஜ், ஃபிரோசாபாத், படவுன் மற்றும் மெயின்புரி உள்ளிட்ட 60% இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றும் சூழ்நிலை இதனால் ஏற்பட்டு உள்ளது. இந்த முடிவு ஆலு பெல்ட்டில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அங்கே உருளைக்கிழங்கு விவசாயிகள் அதிகம் உள்ள பெல்ட் ஆகும்,.
இன்று கன்னோஜ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கும் அகிலேஷ் யாதவ் தனது வேட்புமனுக்களை தாக்கல் செய்வார் என்று கட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்படி சொல்வது என்றால்.. இப்போது முதல்வர் ஸ்டாலின் திடீரென சட்டசபை தேர்தலில் வையில் போட்டியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அது எந்த மாதிரியான அரசியல் மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்தும். மொத்த கொங்கு பெல்ட்டும் இதனால் திமுகவிற்கு சாதகமாக கூட மாறும் நிலை ஏற்படும். அப்படி ஒரு முடிவுதான் லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் எடுத்துள்ள முடிவு.
பாஜகவிற்கு சிக்கல்: அங்கே அகிலேஷ் யாதவ் பிடிஏ என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளார். பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு எதிராக பிடிஏ என்ற அஸ்திரத்தை எடுத்துள்ளார். picchde (பிற்படுத்தப்பட்டவர்), Dalits (தலித்) மற்றும் alpsankhyak (மைனாரிட்டி) என்பதைதான் பிடிஏ என்கிறார். இந்த முழக்கத்தோடு அவர் கன்னோஜ் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
1998 - 2014 வரை கன்னோஜ் தொகுதி சமாஜ்வாதி இருந்த தொகுதி. கடந்த முறை இங்கே 2019ல் பாஜக வென்றது. அதற்கு முன் அகிலேஷ் - அவரின் அப்பா முலாயம், - அகிலேஷ் மனைவி டிம்பிள் என்று பலரும் வென்ற தொகுதி. இங்கேதான் தற்போது அகிலேஷ் யாதவ் மீண்டும் போட்டியிட முடிவு செய்து என்றுள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications