குழந்தை ராமரா இருந்தாலும் வரி கட்டணும்! அயோத்தி கோவில் கொட்டி கொடுத்தது இத்தனை கோடியா? தலை சுத்துதே!
லக்னோ: பல்வேறு சர்ச்சைகள் நீதிமன்ற வழக்குகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு பால ராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறார். தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் குழந்தை இராமரும் வரி கட்டியிருக்கிறார். அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த கோவில் அறக்கட்டளை சார்பில் செலுத்தப்பட்ட வரி தொகை தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து பிரம்மாண்டமாக கோவில் கட்டும் பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்தாண்டு பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பால ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

தொடர்ந்து அந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்ற நிலையில் சுமார் 60 கோடி பேர் புனித நீராடினர். தொடர்ந்து அயோத்தி ராமர் கோவிலுக்கும் அவர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அரசுக்கு அயோத்தி ராமர் கோவில் தரப்பில் 400 ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசியுள்ள அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் செயலர் சம்பத் ராய்," அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டைக்கு மட்டும் 113 கோடி செலவானது. தொடர்ந்து கோவிலின் கட்டுமானத்திற்கு 1800 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது. 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ள கட்டுமான பணிகளுக்கு கூடுதலாக 670 கோடி ரூபாய் வரை தேவைப்படும். அறங்காவலர் குழு கணக்குகளை சரி பார்த்து நிலையில் கடந்தாண்டு செப்டம்பரில் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ராமர் கோவிலுக்கு 20 கிலோ தங்கமும் 13 குவிண்டால் வெள்ளியும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் தேதி வரை 800 கோடி ரூபாய் வரைக்கும் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 2023 2024 ஆம் நிதி ஆண்டில் மொத்த செலவு 676 கோடி ரூபாய் ஆகி உள்ள நிலையில் 363 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. அதில் 204 கோடி ரூபாய் வட்டியாகவும், 58 கோடி ரூபாய் நன்கொடையாகவும் கிடைத்துள்ளது.
2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி வரை அரசுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் 400 கோடி ரூபாய் வரி செலுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியாக 270 கோடி ரூபாயும், பிற வகை கணக்கில் 130 கோடி ரூபாய் வரியாக செலுத்தப்பட்டு இருக்கிறது. அயோத்தியா அறக்கட்டளையின் நிதி ஆவணங்கள் தலைமை கணக்கு தணிக்கையாளர் மூலம் தணிக்கை செய்யப்படுகிறது.
அயோத்திக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து இருக்கும் நிலையில், முக்கிய ஆன்மீக சுற்றுலா மையமாக அயோத்தி உருவாக்கியுள்ளது.இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மகா கும்பமேளாவின் போது சுமார் ஒன்றரை கோடி பக்தர்கள் வருகை தந்திருக்கின்றனர்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications