யோகி எல்லாம் வந்தும் கூட.. மொத்த அரசும் களமிறங்கியும் கூட.. உ.பியிலேயே "இந்தியா"விடம் வீழ்ந்த பாஜக!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்து இருப்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோசி, ஜார்கண்டின் டும்ரி, தன்பூர் திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் மற்றும் உத்தரகாண்டின் பாகேஷ்வரிலும் தேர்தல் நடந்தது. இந்த 5 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பாக கூட்டணி வேட்பாளர் களமிறக்கப்பட்டார்.

மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளிவிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் துப்குரி மற்றும் கேரளாவில் புதுப்பள்ளியில் கட்சிகள் தனி தனியாக போட்டி. இங்கே இந்திய கூட்டணி ஒன்றாக களமிறங்காமல் ஒரு சில கட்சிகள் மட்டும் தனி தனியாக இறங்கின.
இதில்தான் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணியிடம் பாஜக வீழ்ந்து உள்ளது.
கோசி இடைத்தேர்தல், உத்தரப் பிரதேசம் இந்தியா கூட்டணி வெற்றி: பாஜகவில் இணைந்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ தாரா சிங் சவுகான் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இங்கே இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
பா.ஜ.க, சார்பில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கே பிரசாரத்துக்கு தலைமை தாங்கினார். இந்த இடைத்தேர்தலை பாஜக அங்கே மிக முக்கியமானதாக கருதியது. யோகி ஆட்சிக்கு கொடுக்கும் ரேங்க் கார்ட் போல இந்த தேர்தல் பார்க்கப்பட்டது. இதனால் கடுமையான பிரச்சாரங்களை பாஜக செய்தது.
யோகி ஆதித்யநாத் நேரடியாக களமிறங்கி தீவிரமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்தார். மொத்த அரசு இயந்திரமும் அங்கே இந்த தேர்தலில் களமிறக்கப்பட்டது. இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணியும் திட்டமிட்டு கூட்டணி தலைவர்கள் மூலம் பிரச்சாரம் செய்தது பாஜகவின் தாரா சிங் சவுகானை எதிர்த்து சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) வேட்பாளர் சுதாகர் சிங் களமிறங்கினார். இங்கே சமாஜ்வாதி கட்சிக்கு காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய இந்திய கூட்டணி கட்சிகள் ஆதரவு. இந்திய கூட்டணி முதல்முறையாக அங்கே ஒன்றாக போட்டியிட்டது.
கோசி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிக்கப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் நேற்று இந்தியா கூட்டணி இங்கே வெற்றி பெற்றது. இங்கே சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்று இருந்தார். பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிப்பது பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் இங்கே தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கூட தாமதம் ஏற்பட்டது. இங்கே 97844 வாக்குகள் பெற்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுதாகர் சிங் கடைசியில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்
இவர் கிட்டத்தட்ட 33580 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் தாரா சிங் சவுகானை வீழ்த்தி உள்ளார். இங்கே இந்தியா கூட்டணியின் வெற்றி தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications