சரசரவென வந்த அமைச்சர்.. டக்குனு தொண்டர் வீட்டு பாத்ரூமிற்குள் போய்.. என்ன சார் இப்படியா பண்ணுவீங்க?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் தொண்டர் வீட்டில் தங்கி இருந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு இரண்டாவது முறை பதவி ஏற்று ஆட்சி நடைபெற்று வருகிறது.

பல புதிய எம்எல்ஏக்களுக்கு இந்த முறை ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயம் அமைச்சர்கள் யாரும் விஐபி கலாச்சாரத்தை பின்பற்ற கூடாது. மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வந்த நாளிலேயே முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டு இருந்தார்.

விஐபி கலாச்சாரம்

விஐபி கலாச்சாரம்

விஐபி கலாச்சாரத்தை அமைச்சர்கள் ஒழிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அம்மாநில தொழில்துறை அமைச்சர் நந்த கோபால் குப்தா செய்த காரியம் ஒன்று உத்தர பிரதேச அரசியலில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அவர் ஷாஜஹான்பூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஷாக் கான்ஹு என்ற கிராமத்திற்கு சென்றவரை பாஜக நிர்வாகி ஒருவர் வரவேற்றுள்ளார்.

எளிமை

எளிமை

இதையடுத்து மீண்டும் மாவட்ட தலைநகருக்கு திரும்பி அரசு மாளிகையில் தங்காமல், அங்கேயே தொண்டர் வீட்டிலேயே தங்க முடிவு செய்துள்ளார். அந்த வீடோ மிகவும் சின்னதாக இருக்கும், சிமெண்ட் கூட பூசாத வீடு அது. இந்த நிலையில் அந்த வீட்டிலேயே தங்கிய அமைச்சர் குப்தா அங்கேயே உணவு சாப்பிட்டு உறங்கி உள்ளார். அதோடு மறுநாள் அந்த வீட்டு பாத்ரூமில் குளித்து உள்ளார். வெறும் அடிபம்பு மட்டுமே இருக்கும் வீட்டில் இவர் குளித்ததை வீடியோ எடுத்து பாஜகவினர் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ

வீடியோ

சரசரவென வீட்டிற்கு போய் தங்கி.. அங்கேயே பாத்ரூமில்வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு.. அடி பைப்பில் தண்ணீர் எல்லாம் அடித்து குளிக்கிறார். வேறு மாநில அமைச்சர்கள் இப்படி செய்வார்களா என்று பாஜகவினர் இந்த வீடியோவை பலமாக பகிர்ந்து வருகிறார்கள். நெட்டிசன்கள் பலர் இவரின் செயலை பாராட்டி வருகிறோம்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முந்தைய ஆட்சிக்கும்.. இப்போது நாங்கள் செய்யும் ஆட்சிக்கும் இதுதான் வித்தியாசம். நாங்கள் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறோம். நாங்கள் விஐபி கலாச்சாரத்தை விரும்பும் ஆட்கள் கிடையாது என்று அமைச்சர் நந்த கோபால் குப்தா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பே கடந்த பாஜக பிரெய்லி மாவட்டத்தில் இதேபோல் அவர் தொண்டர் வீடு ஒன்றில் தங்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+