கண்ட இடத்தில் கை வைத்த பாஜக எம்பி.. நெளிந்த பெண் எம்எல்ஏ! உபி பாஜக நிர்வாகிகள் முன் மேடையில் பகீர்
லக்னோ: பாஜக பெண் எம்.எல்.ஏவிடம், பாஜக எம்பி பொது நிகழ்ச்சியில் அனைவர் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட பரபரப்பு வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பாஜகவை சேர்ந்த சதீஷ் குமார் கவுதம். இவர் தனது கட்சியை சேர்ந்த பாஜக பெண் எம்.எல்.ஏ. முக்தா ராஜாவிடம் பொது நிகழ்ச்சியிலேயே தகாத முறையில் நடந்து இருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் அலிகர் பகுதியில் உள்ள ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. அதில் பாஜக எம்பி சதீஷ் குமார் கவுதம், பாஜக எம்.எல்.ஏ. முக்தா ராஜா, பாஜக அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.
சதீஷ் குமார் அருகிலேயே முக்தா ராஜாவுக்கு இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. இருவரும் அருகருகே அமர்ந்து இருந்த நிலையில் சதீஷ் குமார் பெண் எம்.எல்.ஏவை தகாத இடங்களில் தொட்டு சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். பெண் எம்.எல்.ஏ. முக்தா ராஜாவின் தோள் மீது கைபோட்டு, பாஜக எம்பி சதீஷ் குமார் சிரிப்பதும், அதற்கு முக்தா ராஜா ஆட்சேபனை தெரிவிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.
ये हैं अलीगढ़ के सांसद सतीश गौतम। जो सरेआम कार्यक्रम के बीच में विधायिका मुक्ता राजा से छेड़खानी कर रहे हैं। इनकी इस हरकत से विधायिका जी भी काफ़ी असहज महसूस कर रही हैं।
— UP Congress (@INCUttarPradesh) September 29, 2023
जिस पार्टी के सांसद ही शोहदा हो, उसके छुटभैय्या नेता कैसे होंगे? बाक़ी कार्यकर्ता तो न जाने कैसे-कैसे होंगे?… pic.twitter.com/cSAlEqdvjI
தொடர்ந்து அந்த பெண் எம்.எல்.ஏ. முக்தா ராஜா இருக்கையில் இருந்து எழுந்து சென்று வேறு இருக்கையில் அமர்ந்து உள்ளார். இதனை அதே மேடையில் அமர்ந்த மற்றொரு பாஜக எம்.எல்.ஏ. தாக்கூர் ஜெய்வீர் சிங் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார். மேடையில் அனைவர் முன்னிலையில் பாஜக பெண் எம்.எல்.ஏவிடம், பாஜக எம்பி தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் தலைவர் சுரேந்திர ராஜ்புத், "பாஜக பண்பட்ட யதார்த்தம் இதுதான்." பிஆர்எஸ் கட்சி பிரமுகர் சதீஷ் ரெட்டி, "மோடி அரசில் பெண் எம்.எல்.ஏவுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!












Click it and Unblock the Notifications