"தலித் பெண் மரணம் கொடுமையானது.. காலைல உடலை எரிக்க சொன்னேன்.. கலெக்டர் கேட்கலை".. பாஜக எம்.பி
உபி தலித் பெண் மரணம் விவகாரம்.. பாஜக எம்பி கருத்து தெரிவித்துள்ளார்
லக்னோ: "ஹாத்ராஸ் தலித் பெண் பாலியல் பலாத்கார சம்பவம் வெட்கக் கேடானது. அந்தப் பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட விதம் அதை விடக் கொடுமையானது. இதுகுறித்து நான் மாவட்ட ஆட்சித் தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்று பாஜக எம்பி ஒருவரே கருத்து சொல்லி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஹாத்ராஸ் தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, அவர் உயிரிழந்தது, அதன் பின்னர் அவரது உடலை அவசரம் அவசரமாக எரியூட்டியது என அடுத்தடுத்து அதிர்ச்சிகளை நாடு என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை பார்த்து வேதனைப்பட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் தவறு செய்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்த எம்பி ஒருவரே கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த எம்பியின் பெயர் ராஜ்வீர் டைலர் ஆவார். இவர் தி பிரின்ட் இதழுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் மாவட்ட ஆட்சித் தலைவரை கடுமையாக கண்டித்துள்ளார்.

பாஜக எம்பி
இதுகுறித்து ராஜ்வீர் டைலர் கூறுகையில், தலித் பெண்ணின் உடல் எரியூட்டப்பட்ட சம்பவம் மிகவும் சர்ச்சைக்குரியது.. இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான். அவரிடம் காலையில் உடலை தகனம் செய்யலாம் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தேன். ஆனால் அவர் அதைக் கேட்கவே இல்லை.

தகனம்
கடந்த 2 நாட்களாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினருடன் நான் பேசி வருகிறேன். அந்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டபோது நானும் அங்கு இருந்தேன்... கலெக்டர், எஸ்பி என அனைவருமே இருந்தனர். ஆனால் போலீஸாரிடம், இப்போது உடலை தகனம் செய்ய வேண்டாம் என்று கூறினேன். கலெக்டரிடமும் கூறினேன். ஆனால்யாருமே கேட்கவில்லை.

சடலம்
அதை விட முக்கியமாக, என்னை அந்த இடத்தை விட்டுக் காலி செய்யுமாறு போலீஸார் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். கலெக்டரிடம் நான் கூறியும் கூட அவர் கேட்கவில்லை. மேலும் உடல் தகனம் குறித்து போலீஸாரும் உரிய முறையில் எனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.

ராத்திரி
இந்த சம்பவம் சர்ச்சையாகாமல் தடுத்திருக்க கலெக்டரால் முடிந்திருக்கும். ஆனால் அவர் அதை செய்யவில்லை. ஆனால் அந்த ராத்திரியில் உடலை தகனம் செய்யும் முடிவை யார் எடுத்தது என்றுதான் நான் கேட்கிறேன்.. மாவட்ட ஆட்சி தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் நான் நிச்சயம் வலியுறுத்துவேன். சம்பவ இடத்தில் பெருமளவில் சமாஜ்வாடி கட்சியினரும், பகுஜன் சமாஜ் கட்சியினரும் கூடியிருந்தனர்.

ராஜினாமா
ஹாத்ராஸ் தொகுதியின் எம்பியாக இந்த சம்பவத்திற்காக நான் வெட்கப்படுகிறேன்.. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நீதி தேடித் தருவேன்.. அப்படி முடியாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று வால்மீகி சமுதாயத்தினருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் எம்பி டைலர்.

குற்றச்சாட்டுகள்
மோகன்லால் இதேபோல மேலும் சிலபாஜக தலைவர்களும் கூட காவல்துறை மீது கடும் குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளனர்.. மோகன்லால்கஞ் பாஜக எம்பி கெளஷல் கிஷோர் கூறுகையில், "போலீஸார் யார் சொல்வதையும் கேட்பதில்லை. அவர்தள் தலித்துகளையும், ஏழைகளையும் மிகவும் துன்புறுத்துகிறார்கள். இவர்களது செயலால் அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.. தங்களது தவறுகளை மறைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்று கோபமாக கூறியுள்ளார். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார்.

கெட்ட பெயர்
இன்னொரு பாஜக எம்பியான கெளசாம்பி வினோத் சோங்கர் என்பவர் சொல்லும்போது, "இது அரசின் பெயரை கெடுத்து விட்டது.. இது எங்களுக்கு மிகப் பெரிய கெட்ட பெயராகும்.. இதன் விளைவை பீகார் தேர்தலில் நாங்கள் சந்திக்க நேரிடும். உபி இடைதேர்தலிலும் எங்களுக்கு பெரும் சிக்கல் வரலாம்" என்றார். இவரும் தலித் எம்பி ஆவார்.
ஆக மொத்தம் உபி போலீஸாரின் செயலால் அந்த மாநில பாஜக எம்பிக்களே கூட ஆவேசமாக உள்ளனர் என்பதை இந்த தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications