யோகி பவரை பாத்தீங்களா? தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியே காலில் விழுறாரு.. ஃபயர் விடும் பாஜக ஆதரவாளர்கள்
லக்னோ: நடிகர் ரஜினிகாந்த் காலில் விழுந்த வீடியோவை பகிர்ந்து உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, போற்றிப் பாடி வருகிறார்கள் வட இந்தியாவை சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள்.
நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 375 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்து இருக்கும் நிலையில், ரஜினிகாந்தோ தமிழ்நாட்டுக்கு வராமல் வட இந்திய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். கடந்த வாரம் படம் ரிலீசுக்கு முன் இமயமலை சென்ற ரஜினிகாந்த் அதன் பின் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சென்றார்.

அங்கு ஜார்க்கண்ட் ஆளுநராக இருக்கும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மாளிகைக்கே நேரில் சென்று சந்தித்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று உத்தரப்பிரதேசத்துக்கு சென்றார் ரஜினிகாந்த். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்கப்போவதாக கூறினார்.
இதனால் எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், ரஜினியுடன் ஜெயிலர் படத்தை பார்க்க யோகி ஆதித்யநாத் விரும்பவில்லை என்று தகவல் வெளியானது. அவருக்கு பதிலாக ரஜினிகாந்துடன் உபி துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா திரைப்படத்தை பார்த்தார். அவரும் முழு ஜெயிலர் படத்தையும் பார்க்காமல் அங்கிருந்து பாதியிலேயே எழுந்து சென்றார்.
இந்த நிலையில் தனது மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் லக்னோவில் உள்ள யோகி ஆதித்யநாத் வீட்டுக்கு சென்றார். அவரை வரவேற்க வீட்டு வாசலில் நின்றார் யோகி ஆதித்யநாத். காரில் இருந்து கீழே இறங்கிய ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
அதே சமயம் யோகி ஆதித்யநாத்தை பாராட்டி ட்விட்டரில் பாஜகவினர் பயர் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ட்விட்டரில் ரஜினிகாந்த், யோகி ஆதித்யநாத் ஆகிய வார்த்தைகள் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. பாஜகவை சேர்ந்த கனியம்பூண்டி செந்தில் ட்விட்டரில், "இந்து தர்மத்தின் (காவி நிறம்) காலில் திராவிடம் (கருப்பு நிறம்) வீழும் என்பதை symbolic - காக உணர்த்தி இருக்கிறார், சூப்பர் ஸ்டார்.." என்று குறிப்பிட்டு உள்ளார். -

மற்றொரு நபர் ட்விட்டரில், "வடக்கின் அரசரின் காலில் தெற்கின் அரசர் விழுகிறார்." என்று அர்த்தம் தரும் படத்தை பகிர்ந்து அகண்ட பாரதத்தை தடுக்க முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார். -

மற்றொரு வட இந்திய பாஜக ஆதரவாளரோ, "தலைமை சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது இந்திய கலாச்சாரத்தின் அங்கம். வயது இதில் பெரிய விசயம் அல்ல. சூப்பர் ஸ்டார் ஒரு ஆன்மீகவாதி. எனவே யோகியின் காலில் விழுவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஒரு தரப்பினர் நன்றாக அழட்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அபிலாஷ் சாந்திலியா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், "காலில் விழுவதற்கு சில தகுதிகள் வேண்டும். யோகி ஆதித்யநாத்துக்கு அது உள்ளது. ரஜினிகாந்த் தென் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார். ஜெயிலர் திரைப்படம் உபியை வந்தடைந்துள்ளது. யோகியின் காலை தொட்டதன் மூலம் புதிய புரட்சி பிறந்துள்ளது. பாபாவின் வசீகரம் அப்படியே இருக்கிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications