Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு அடி! உத்தர பிரதேச இடைத்தேர்தலில் 9ல் 7 இடத்தில் பாஜக வெற்றி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 9 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக 7 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 2 தொகுதிகளில் மட்டுமே ஜெயித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 9 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என்பது நடந்தது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது.

election results 2024 uttar pradesh by election results

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மாறாக சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி பின்தங்கி உள்ளது. காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளர்களும் நிறுத்தப்படாத நிலையில் அனைத்து தொகுதிகளிலும் சமாஜ்வாதி வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தான் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:

* மீராபூர் சட்டசபை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின் வேட்பாளர் மித்லேஷ் பால் 30,79வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 84,304 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சும்புல் ராணா 53,508 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.

* குந்தர்கி தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம்வீர் சிங் வெற்றி பெற்றார். மொத்தம் 36 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 371 வாக்குகள் பெற்றிருந்தார். சமாஜ்வாதி வேட்பாளர் முகமது ரிஸ்வான் வெறும் 25,580 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் பாஜகவின் ராம்வீர் சிங் 1 லட்சத்துக்கு 44 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெற்று பின்தங்கியிருந்தார்.

* காசியாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் சஞ்சீவ் சர்மா 69,351 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 96,946 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சிங் ராஜ் ஜாதவ் 27,595 வாக்குகள் வாங்கி தோற்றுப்போனார்.

* கைர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேந்தர் தில்லர் 38,393 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 1 லட்சத்து 181 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சாரு கைன் 61,788 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார்.

* புல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் தீபக் படேல் 11,305 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 78,289 ஓட்டுகள் பெற்றார். இங்கு சமாஜ்வாதி வேட்பாளர் முகமது முஜ்தபா சித்திக் 66,984 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.

* காதேஹரி தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்மராஜ் நிசாத் 34,514 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 91 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சோபாவாதி வர்மா 69,577 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

* மஜாவன் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுஷிமிதா மயூரா 4,922 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 77 ஆயிரத்து 737 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்த சமாஜ்வாதி வேட்பாளர் ஜோதி பிண்ட் 72,815 ஓட்டுகளுடன் தோல்வியடைந்தார்.

* கார்கல் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் தேஜ் பிரதாப் சிங் 14,725 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 304 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் அனுஜேஷ் பிரதாப் சிங் 89,579 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.

* சிஷாமா தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நசீம் சோலங்கி 8,564 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 69,714 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் சுரேஷ் அவஸ்தி 61,150 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+