அடக்கம் செய்யும் இறுதிநொடி.. கொலையாளியை கண்டுபிடித்த போலீஸ்.. உ.பியை உறையவைத்த இளைஞர் கொலை!
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகனின் மரண விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த பிரமுகரின் மகனின் மரண விசாரணையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ரமேஷ் யாதவின் மகன் அபிஜித் யாதவ் நேற்று மரணம் அடைந்தார். மது போதையில் இருந்த அபிஜித் யாதவ் அப்படியே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
23 வயதான இவர் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் அபிஜித் யாதவின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் மரண விசாரணையில் திடுக்கிடும் திருப்பமும் ஏற்பட்டு இருக்கிறது.
[ரூ.3 லட்சம் சொகுசு பைக்கில் டெஸ்ட் டிரைவிங்.. ஓனர் அசந்த நேரம் பைக்குடன் சர்ரென எஸ்கேப்பான இளைஞர்! ]

என்ன சொன்னார்
அபிஜித் யாதவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, போதை காரணமாக பின் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவ அறிக்கை அப்படித்தான் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு குடித்துவிட்டு வந்த அபிஜித் யாதவ் நெஞ்சு வலிக்கிறது என்று கூறிவிட்டு படுத்ததாகவும், காலையில் மரணம் அடைந்துவிட்டதாகவும் போலீசில் அபிஜித் யாதவின் அம்மா மீரா யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடைசியில் கண்டுபிடித்தனர்
இந்த நிலையில் போலீஸ் இந்த வழக்கை இயற்கை மரணம் என்று முடிக்க முடிவெடுத்து இருக்கிறது. ஆனால் இறுதி சடங்கு நடந்து கொண்டு இருக்கும் போது, அபிஜித் யாதவின் கழுத்தில் கை தடங்களை போலீசார் கவனித்து இருக்கிறார்கள். இதனால் உடனே சடங்கை நிறுத்த சொல்லி, அபிஜித் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

எப்படி மரணம்
பிரேத பரிசோதனையில் அபிஜித் கழுத்து நெறிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த குடும்ப உறுப்பினர்கள் எல்லோரிடமும் இதுகுறித்து விசாரித்து இருக்கிறார்கள். கடைசியில் சந்தேகம் வரவே அபிஜித் யாதவின் அம்மா மீரா யாதவ் விசாரிக்கப்பட்டு பின் கைது செய்யப்பட்டார்.

மகன் கிடையாது
இந்த நிலையில் மீரா யாதவ், அபிஜித் யாதவை கொன்றது தான்தான் என்று போலீசில் ஒப்புக்கொண்டு இருக்கிறார். குடித்துவிட்டு வந்ததால் கோபம் தாங்காமல் இப்படி செய்ததாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அபிஜித் யாதவ் மீரா யாதவின் சொந்த மகன் கிடையாது என்றும், ரமேஷ் யாதவின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் அபிஜித் யாதவ் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications