நல்லாதான் போய்ட்டிருந்துச்சு.. திடீர்னு செருப்பால அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இது பாஜக கலாட்டா!
பாஜக எம்எல்ஏவை பாஜக எம்பி செருப்பால் அடித்த வீடியோ வைரலாகிறது.
Recommended Video

லக்னோ: நல்லாதான் பேசிட்டு இருந்தாங்க.. திடீர்னு செருப்பு எடுத்து பாய்ந்து பாய்ந்து அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படி அடித்து கொண்டவர்கள் பாஜக எம்பியும், எம்எல்ஏவும்தான் என்பதுதான் விஷயமே!
உத்திரபிரதேசம் சந்த் கபிர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில், பாஜக எம்பி சரத் திரிபாதி மற்றும் பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் சிங் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எல்லோருமே சேரில் உட்கார்ந்து அமைதியாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையில் பேனரில் பெயர் சேர்க்கப்படாதது குறித்து காரசார விவாதம் எழுந்தது.

செருப்பால் அடித்தார்
திடீரென்று விவாதம் முற்றிப் போனது. ஒருகட்டத்தில் ஆத்திரம் தாங்காத எம்.பி சரத் திரிபாதி தனது காலில் இருந்த செருப்பை எடுத்து எம்எல்ஏ ராகேஷ் சிங் பேகலை அடிக்க ஆரம்பித்தார்.

சரமாரி தாக்கு
இதை அங்கிருந்தவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. உடனடியாக எம்எல்ஏ பேகலும் பதிலுக்கு திரிபாதியை தாக்கத் தொடங்கினார். ஆனால் அவர் வெறுங்கையால்தான் அடித்தார். எம்பியோ கடைசிவரை கையில் எடுத்த செருப்பை கீழே போடவில்லை.

சமாதானம்
நிலைமை ரொம்ப மோசமாகி கொண்டே போனதை அடுத்து, அருகிலிருந்த கட்சி நிர்வாகிகளும் போலீஸ் அதிகாரி ஒருவரும் அவர்களை சமாதானப்படுத்தி விலக்கிவிட்டார்கள்.

வீடியோ வைரல்
ஒரு பேனரில் பெயர் விஷயத்துக்காக ஒரு எம்எல்ஏவும், எம்பியும் பொதுவான இடத்தில் இப்படி செருப்பால் தாக்கி கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகி பாஜக மானத்தை வேகவேகமாக கப்பலேற்றி வருகிறது.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications