பாயிண்ட் பாயிண்ட்டா சொன்ன யோகி.. வேற லெவலுக்கு உயரும் உ.பி. என்னாது டபுள் என்ஜினா?.. பூரித்த முதல்வர்

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபடும் மாஃபியாக்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நேற்று(மார்ச்.07) கோரக்நாத் கோயில் வளாகத்தில் மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தனர். மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட யோகி, குறைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று கூறியுள்ளார். மாநிலத்தின் வளர்ச்சியானது 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும் எனவே இதில் குறுக்கிடுபவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

CM Yogi Adityanath has said that strict action has been taken against land mafias in UP

நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசும், காவல்துறையினரும் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
நில தகராறு புகார்களில் இரு தரப்பிலும் குற்றச்சாட்டு இருப்பின் உண்மை தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதே ஆக்கிரமிப்பு புகார் இருந்தால் உறுதியான, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது தவிர காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் மருத்துவ உதவிக்காக சில பெண்கள் வந்திருந்தனர். அவர்களிடையே உரையாற்றிய யோகி, "மருத்துவ சிகிச்சைக்காக மனு கொடுத்திருப்பவர்களுக்கு தேவைப்படும் நிதி வழங்கப்படும். மேலும் இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படும். தரமான சிகிச்சையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.

CM Yogi Adityanath has said that strict action has been taken against land mafias in UP

இந்த கூட்டத்திற்கு மத்தியில் சிறுவன் ஒருவன் யோகி ஆதித்யநாத்துடன் விளையாட தொடங்கிவிட்டான். அவரும் சிறுவனுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்திற்காக பட்ஜெட் சில நாட்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் தலா ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை அமைப்பதை அரசு இலக்காக கொண்டிருப்பதாக அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியுள்ளார். மேலும் விவசாயிகளின் வாழ்க்கையில் டபுள் இன்ஜின் பாஜக அரசு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதே இதற்கான சான்று என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+