லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா.. 14 கிராமங்களை சீல் வைத்த உ.பி. அரசு

Google Oneindia Tamil News

லக்னோ: டெல்லி மத மாநாட்டுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிய 14 கிராமங்களுக்கு உத்தரப்பிரதேச போலீசார் சீல் வைத்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பதாவுன் மாவட்டம் பவானிபூர் ஹாலி பகுதியில் மசூதி ஒன்றில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்கி இருந்தார். டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாதம் நடைபெற்ற மத மாநாட்டிலும் அந்த இளைஞர் பங்கேற்றவராம்.

Coronavirus: 14 villages in UP sealed because of one man

தற்போது அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் தங்கியிருந்த பகுதியில் 3 கி.மீ. சுற்றளவில் 14 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட நீதிபதி குமார் பிரஷாந்த் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் மட்டும் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 பேர் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒட்டுமொத்தமாக உ.பி.யில் 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவால் 5 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

ஊரடங்கிற்கு ஊறுவிளைவிக்கும் குழப்பங்களும்.. குளறுபடிகளும்.. தீர்க்காவிடில் பெரும் சிக்கல் ஏற்படலாம்!ஊரடங்கிற்கு ஊறுவிளைவிக்கும் குழப்பங்களும்.. குளறுபடிகளும்.. தீர்க்காவிடில் பெரும் சிக்கல் ஏற்படலாம்!

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 308 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Uttar Pradesh’s Badaun has put 14 villages under quarantine after a man tested positive for coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X