மரு"மகளுடன்" உல்லாசமாக இருந்த மாமனார்! கையும் களவுமாக பிடித்த மாமியார்! கடைசியில் நடந்த பகீர்
லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாமனாரும் மருமகளும் உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாமியாரை இருவரும் சேர்ந்து கொலை செய்து கழிப்பறையில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா தேவி (50). இவரது மகன் தீபக். கீதா தேவியின் கணவர் குர்கு யாதவிற்கும் மருமகளுக்கும், அதாவது தீபக்கின் மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக தொடர்பு இருந்து வந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீதா தேவி வெளியே சென்றிருந்த நிலையில் மாமனாரும் மருமகளும் படுக்கை அறையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வெளியே இருந்த வேலைகளை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் கீதா தேவி.
தனது மருமகளை தேடிக் கொண்டிருந்த போது அவர் தனது கணவருடன் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டார். உடனே அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்துவிட்டார். அப்போது இருவரும் கீதாவுடன் சண்டையிட்டனர்.
இதையடுத்து "செய்றதையும் செய்துவிட்டு என்னையா மிரட்டுறீங்க, உங்கள் வண்டவாளங்களை என் மகன் தீபக் வரட்டும், அவரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் சொல்கிறேன்" என பதிலுக்கு கீதாவும் மிரட்டியுள்ளார். இதனால் அந்த கள்ளக்காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்து, கீதா, தீபக்கிடம் சொல்லிவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடுமே என அஞ்சிய இருவரும் ஆத்திரமடைந்தனர்.
உடனே கீதா தேவி , தீபக்கை அணுகாத வகையில் கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி மாமியார் தலையில் மருமகள் செங்கல், மரக்கட்டைகளால் தாக்கி கொடூரமாக கொலை செய்தாராம். கொலையை மறைக்க மாமியாரின் சடலத்தை வீட்டின் கழிவறைக்குள் மறைத்து வைத்துவிட்டு இருவரும் கீதாவை காணவில்லை என நீலிக் கண்ணீர் வடித்தனராம்.
இந்த கள்ளக்காதல் ஜோடி இருவரும் சேர்ந்து அப்பாவி கீதா தேவி மீது களங்கத்தை ஏற்படுத்தியது. தீபக், வந்து அம்மா எங்கே என கேட்ட போது, மாமனாரும் மருமகளும் சேர்ந்து "நாங்கள் எவ்வளவும் தடுத்தும் கேட்காமல் யாரோ ஒருவருடன் பைக்கில் சென்றுவிட்டார்" என ஒப்பாரி வைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தீபக், தனது தாயை காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் வீட்டில் வந்து தேடுதல் வேட்டை நடத்திய போது கழிப்பறைக்குள் இருந்த கீதா தேவியின் சடலத்தை மீட்டனர்.
தலையில் பலத்த காயங்களுடன் அவர் இறந்ததாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து மாமனார், மருமகள், தீபக் ஆகியோரை அழைத்து தனித்தனியாக விசாரித்தனர். அப்போதுதான் மாமியாரை கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையை தாக்கு பிடிக்க முடியாமல் மாமனாரும் மருமகளும் சேர்ந்து உண்மையை சொல்லிவிட்டனர். இதையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications