"21 வயது பொண்ணு.." நடுரோட்டில் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டு தள்ளிய இளைஞர்கள்! ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி கொல்லப்பட்டு சில நாட்கள் கூட ஆகாத நிலையில், மீண்டும் ஒரு கொடூர கொலை அங்கே அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல தாதா அத்திக் அகமது போலீஸ் கஸ்டடியில் இருந்த போதே, அனைத்து ஊடகத்தினர் முன்பு கொடூரமாகச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

 Daylight Murder Of Woman Sparks Outrage in Uttar Pradesh

இந்தச் சம்பவம் உபி-இல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.. அங்கே சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே மீண்டும் அதேபோல ஒரு ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசம்: அன்றாவது ரவுடிதான் கொலை செய்யப்பட்டார். ஆனால், இப்போது அங்கே அப்பாவி இளம்பெண் ஒருவர் கொடூரமாகச் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை ஜலான் மாவட்டத்தில் கல்லூரித் தேர்வெழுதிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அங்கே போலீஸ் நிலையத்திற்கு 200 மீட்டர் தொலைவில் நெரிசலான சாலையில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அவர்கள் துப்பாக்கியையும் அங்கேயே வீசிவிட்டும் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் ரோஷ்னி அஹிர்வார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 21 வயதான அந்த என்ற பிஏ மாணவி, தேர்வு முடித்துவிட்டு காலை 11 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இளம் பெண் கொலை: அப்போது அங்கே பைக்கில் வந்த இருவர், திடீரென நாட்டுத் துப்பாக்கியை வெளியே எடுத்து அந்த பெண்ணை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர். இதில் அந்த பெண்ணின் கை. மற்றும் தலையில் பாய்ந்துள்ளது. இதனால் ரோஷ்னி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உள்ளூர் வாசிகள் அந்த நபர்களைப் பிடிக்க விரைந்த போதும், அவர்கள் துப்பாக்கியை வீசி எரிந்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ராஜ் அஹிர்வார் என்பவர் மீது பெற்றோர் புகார் அளித்த நிலையில், அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..

ஷாக் வீடியோ: இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த பெண் ரத்த வெள்ளத்தில் இருப்பதும் அவர்களைப் பிடிக்கச் சிலர் முயல்வதும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த பெண் சீருடையில் இருக்கும் நிலையில், துப்பாக்கியும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. மாநிலத்தில் சட்ட ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர் அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே ராஷ்ட்ரிய ஜனதா தளமும் இந்த வீடியோவை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து யோகி அரசைக் கடுமையாகச் சாடியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+