"ரொமான்ஸ்".. ராத்திரியில்.. ரோட்டில் ஜோடி செய்த காரியம்.. அந்த பொண்ணு மைனராம்..போலீசுக்கு போன வீடியோ
நடுரோட்டில் காதலர்கள் பைக்கில் செய்த அட்டகாசம் காண்போரை அதிர செய்துள்ளது
லக்னோ: இளம் காதல் ஜோடியின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளதுடன், தொடர்ந்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த மாதம், சென்னை தாம்பரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. நைட் நேரத்தில், ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்றுள்ளது.. அந்த இளைஞர் பைக் ஓட்ட, காதலி பின்சீட்டில் உட்காராமல், காதலனுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டார்..
காதலனையும் இறுக்கி கட்டிப்பிடித்து கொண்டார்.. 2 பேருமே ஹெல்மட் போடவில்லை.. இதை இவர்களுக்கு பின்னாடி வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் கவனித்துள்ளார்..

ஹைவேஸ்
ஹைவேஸில் ஹெல்மட் இல்லாமல், ஆபத்தான முறையில் பயணம் செய்யவும், அவர்களை மடக்கி, அந்த பயணத்தை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், ஆட்டோ டிரைவர் சொன்னதை அந்த ஜோடி காதிலேயே வாங்கவில்லை.. அவரிடம் வாக்குவாதம் செய்தன.. அதுவும் அந்த பெண், பைக்கின் முன்பக்கத்தில் இருந்து கீழே இறங்காமலேயே, பைக்கில் உட்கார்ந்தபடியே ஆட்டோ டிரைவரை திட்டினார்.. அதுமட்டுமல்ல, ஒருகட்டத்தில் ஆவேசமாக ஆட்டோ டிரைவர் மீதே கோபத்தில் பாய பார்த்தார்.. உடனே இளைஞர், அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்..

தடித்த வார்த்தை
சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற வாகன ஓட்டிகளும், காதலர்களுக்கு அறிவுரை சொல்ல வந்தனர். ஆனால், அந்த பெண்ணோ, அடங்க மறுத்து எகிற ஆரம்பித்துவிட்டார். அப்போதுதான், அந்த பெண் குடிபோதையில் இருக்கிறார் என்பது அனைவருக்குமே புரிந்தது.. அவரது தடித்த வார்த்தைகளையும், கொஞ்சமும் அடங்காத ஆவேசத்தையும் கண்டு, செய்வதறியாது வாகன ஓட்டிகள் விழித்தனர்.. உடனே நிலைமையை உணர்ந்த இளைஞர், அந்த பெண்ணை அடக்க முயன்றும் முடியாததால், ஆட்டோ டிரைடர் உட்பட அங்கிருந்தோரிடம் மன்னிப்பு கேட்க துவங்கினார்..

நைட் அண்ட் டே
பிறகு, அவசர அவசரமாக பைக்கை கிளப்பிக் கொண்டு, அந்த பெண்ணையும் ஏற்றிக்கொண்டு பறந்தார்.. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்திலும் வெளியாகி அதிர்ச்சியை தந்தது. இதேபோல ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இதேபோல ஒரு காதல் ஜோடி பைக்கில் சென்றுள்ளது.. டாம் குரூஸ்-கேமரூன் டயஸ் நடித்த "நைட் அண்ட் டே" என்ற ஹாலிவுட் ஒரு சீன் வரும்.. காதலர்கள் பைக்கில் சென்றவாறே ரொமான்சில் ஈடுபடுவதுபோல அந்த காட்சி இருக்கும்.. அதுபோலவே இந்த ஜோடியும், நடுரோட்டில் சேஷ்டைகளை அரங்கேற்றியுள்ளது..

ரொமான்ஸ்
லக்னோவின் மிக மிக நெரிசலான பகுதி அது.. அந்த அளவுக்கு பிஸியான ரோட்டில், காதலர்கள் 2 பேரு பைக்கில் செல்கிறார்கள்.. காதலன் பைக்கை ஓட்டிச்செல்ல, இந்த பெண், பைக்கின் முன்பக்கம் ஏறி உட்கார்ந்து கொண்டு, காதலனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டார்.. காதலனை வழியெல்லாம் கொஞ்சிக்கொண்டே சென்றார். இதைப்பார்த்த சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.. அவர்களிடம் ஒருசிலர் அறிவுறுத்த சென்ற நிலையில், அந்த ஜோடி எதையுமே கண்டுகொள்ளவில்லை.. இந்த ரொமான்ஸ் காட்சியை, இவர்களுக்கு பின்னால் வந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.. அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டார்..

கழுத்தை பிடித்து முத்தம்
அந்த வீடியோ 14 வினாடிகள் ஓடுகிறது.. பைக்கின் முன்பக்கத்தில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு, இளைஞரை கட்டிப்பிடிப்பதும், கழுத்தைப் பிடித்து முத்தம் கொடுப்பதும் என அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. அதைவிட முக்கியமாக, 2 பேருமே ஹெல்மெட் அணியவில்லை.. இந்த வீடியோவை ஜாரிக் என்பவர், உத்தரபிரதேச போலீசாருக்கும் ஷேர் செய்திருக்கிறார். வீடியோவை பார்த்த போலீசாரும் விசாரணையை துவங்கினர்.. காதலன் பெயர் விக்கி சர்மா.. 23 வயதாகிறதாம்.. அவரை இப்போது போலீசார் கைது செய்துள்ளனர்..

மைனர் காதலி
அவசர அவசரமாக பைக்கை ஓட்டியதற்காகவும், பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. அந்த காதலி யார் என்று விசாரித்தால், அவர் ஒரு மைனர் என்பது தெரிந்தது.. பிறகு அவர்மீது வழக்கு எதுவும் பதியாமல், போலீசார் அவருக்கு வார்னிங் தந்து விடுவித்தனர்.. விக்கி சர்மா ஒரு சிறிய ஜவுளிக்கடை வைத்திருக்கிறாராம்.. திருமண விழாக்களில் டிஜே என்று சொல்லப்படும் தொகுப்பு இசை நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்..

ஹெல்மெட் எங்கே
இதுபற்றி லக்னோ கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா சொல்லும்போது, விக்கி சர்மா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஆபாச செயல்கள் (பிரிவு 294) மற்றும் அவசரமாக வாகனம் ஓட்டுதல் (பிரிவு 279) ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.. அந்த பெண் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி என்பதால் அவரை எச்சரித்து அனுப்பிவிட்டோம்.. பொதுமக்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், ஹெல்மெட் அணியாமல் போகாதீர்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications