சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த புகாரில் சிக்கிய சுவாமி சின்மயானந்தா உடல் நிலை கவலைக்கிடம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சட்டக்கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக புகாரில் சிக்கிய பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரின் சுவாமி சின்மயானந்தாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் இரண்டாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவி ஒருவர் தன்னை மாநில பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் , முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா ஓராண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டி வீடியோ வெளியிட்டார்

doctor said BJP Leader Swami Chinmayanands Health Deteriorates

இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த சட்டக்கல்லூரி மாணவி மாயமானார். பின்னர் ராஜஸ்தானில் இருந்து போலீசாரால் அவரை மீட்டு வந்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரை ஏற்று போலீசார் சுவாமி சின்மயானந்தா மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கினை சிறப்பு புலனாய்வு குழுவினர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி விசாரித்து வருகிறார்கள்.

சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தது.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+