இல்லாத நாட்டுக்கு தூதரகம்.. உ.பியில் பலே மோசடி! இந்த பெயரை கேட்டா.. உஷாரா இருங்க!
லக்னோ: போலியான டோல்கேட், வங்கி உள்ளிட்ட மோசடிகளை நாம் கேள்விபட்டிருப்போம். அந்த வரிசையில் தற்போது போலி தூதரக மோடியும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இல்லாத ஒரு நாட்டிற்கு போலியான தூதரகம் அமைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவி நகர் பகுதியில், ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவர் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். இவர் இந்த வீட்டில் தங்கியிருக்கவில்லை. மாறாக வீட்டை அலுவலகமாக மாற்றியிருக்கிறார். வீட்டிற்கு வெளியில் 'வெஸ்ட் அண்டார்டிகாவின் தூதர் ' என்று பெரிய போர்டு மாட்டப்பட்டிருக்கிறது.

இல்லாத நாட்டின் தூதர்
ஆடம்பர கார்களில் அவர் அடிக்கடி இங்கு வந்து போவதை அக்கம் பக்கத்து மக்கள் பார்த்திருக்கிறார்கள். ஹர்ஷ் வர்தன், இங்கிருந்துக்கொண்டு போலி ஆவணங்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் மோசடி செய்து வந்திருக்கிறார்.
உண்மையில் 'வெஸ்ட் அண்டார்டிகா' என ஒரு நாடே கிடையாது. கடந்த 1986ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' எனும் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதில், 'சலாமியா கிங்டம்' எனும் நாடு குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் அப்படி ஒரு நாடே கிடையாது. சமீபத்தில் வெளியான KGF திரைப்படத்தில் கூட, கோலார் தங்க வயலில் 'நராச்சி' எனும் இடம் இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அங்கு அப்படி எந்த இடமும் கிடையாது.
மார்பிங் செய்யப்பட்ட படம்
அதேபோலதான் இல்லாத ஒரு நாட்டை இருப்பதாகவும், அதற்கான தூதர் நான்தான் என்றும் ஹர்ஷ் வரதன் ஏமாற்றியிருக்கிறார். மட்டுமல்லாது செபோர்கா, லடோனியா மற்றும் போல்வியா போன்ற கற்பனையான நாடுகளின் பிரதிநிதியாகவும் கூறி வந்துள்ளார். உயர் அதிகாரிகள் மற்றும் பிரதமர்கள், ஜனாதிபதிகளுடன் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் போலி முத்திரைகள் அடங்கிய ஆவணங்களை காண்பித்து, தான் ஒரு பெரிய சர்வதேச முக்கிய பிரமுகர் என்பதைப் போல அவர் காட்டிக்கொண்டிருக்கிறார்.
குறிவைக்கப்பட்டவர்கள்
இதன் மூலம், தொழிலதிபர்களை ஏமாற்றி, சர்வதேச சந்தைகளில் முதலீடு செய்ய உதவுவதாக கூறி ஹவாலா நெட்வொர்க் நடத்தி வந்துள்ளார். மட்டுமல்லாது வெளிநாட்டு முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு விசாவிற்கு முயற்சி செய்பவர்களை குறிவைத்து, போலியான தூதரகம் மூலம் சர்வதேச அளவில் தனக்கு ஒரு நம்பகமான அடையாளத்தை உருவாக்கி மோசடி செய்து வந்துள்ளார்.
ஆனால் அவரது நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த உள்ளூர் மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை வெளி வந்திருக்கிறது.
ஹவாலா பணம் பறிமுதல்
ஹர்ஷ் வரதனிடமிருந்து, போலி நம்பர் பிளேட் கொண்ட நான்கு வாகனங்கள், 18 போலி தூதரக நம்பர் பிளேட்டுகள், 12 போலி தூதரக பாஸ்போர்ட்கள், வெளிவிவகார அமைச்சகத்தின் முத்திரைகள் பொறிக்கப்பட்ட ஆவணங்கள், இரண்டு போலி பான் கார்டுகள், பல்வேறு நாடுகளின் 34 முத்திரைகள், இரண்டு போலி பத்திரிகை அட்டைகள், ரூ. 44.7 லட்சம் பணம் மற்றும் ஹவாலா நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பல கம்பெனிகளின் வணிக ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆயுத வியாபாரி
கைது செய்யப்பட்ட ஹர்ஷ் வரதன், இதுபோன்ற மோசடியில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2011ஆம் ஆண்டு, சட்டவிரோதமாக செயற்கைக்கோள் தொலைபேசி வைத்திருந்ததற்காக காசியாபாத் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவர் மறைந்த சாமியார் சந்திராசாமி மற்றும் சர்வதேச ஆயுத வியாபாரி அத்னான் கஷோகி ஆகியோருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலியான தூதரகம் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் உ.பி மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. நீங்களும் உங்களுக்கு தெரியாத ஏதோ ஒரு நாட்டின் பெயரை சொல்லி வேலை வாங்கி தருவதாக சொன்னால் உடனே உஷாராகிவிடுங்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications