"அண்ணா என்னாச்சு".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா!

ராகுல்காந்தியை போலீஸ் தள்ளிவிட்டதால் பிரியங்கா காந்தி பதறி போய்விட்டார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: போலீஸ் தள்ளியதும் நிலைகுலைந்து கீழே தடுமாறி விழுந்து எழுந்த ராகுல் காந்தியை துடித்து போய், பிரியங்கா பார்க்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலத்தையும் நடுராத்திரி சுடுகாட்டில் கொண்டு போய் போலீசார் எரித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சமயத்தில், அந்த பெண் பலாத்காரமே செய்யப்படவில்லை என போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது அடுத்த ஷாக்கை உறவினர்களுக்கு தந்து வருகிறது.

 ஆறுதல்

ஆறுதல்

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல பிரியங்காவும், ராகுல்காந்தியும் போலீசாரின் தடையை மீறி சாலையில் நடந்து சென்றனர்.. அப்போது அதிகாரிகள் அவர்களை வழிமறித்தனர்.. மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்கவும் மறுத்தனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

அவர்களுடன் ராகுலும் பிரியங்காவும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, தொடர்ந்து நடந்து செல்ல முயலும்போது, போலீசார் ராகுலை பிடித்து கீழே தள்ளிவிட்டனர்.. இதில் சாலையோரத்திலேயே ராகுல் நிலைதடுமாறி விழுந்தார்.. அது மண் சாலை.. பக்கத்திலேயே செடிகள் பல இருந்தன.. அங்கேயே ராகுல் காந்தி விழுந்துவிட்டார்.. பிறகு அங்கிருந்த பாதுகாவலர்கள் உதவியுடன் ராகுல் எழுந்தார்.

காயங்கள்

காயங்கள்

ராகுலும் பிரியங்காவும் வருகிறார்கள் என்ற அறிந்து அவர்களை வரவேற்க தயாராக இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் இதை பார்த்து அதிர்ந்தனர்.. கீழே விழுந்ததில் ராகுல் உடம்பில் லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.. இந்த காயங்களை பார்த்து பக்கத்தில் இருந்த பிரியங்கா பதறி போய்விட்டார்.. அண்ணனின் உடம்பில் வேறு எங்காவது காயம் இருக்கிறதா என்றும் பார்த்தார்.. இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

குழந்தையில் இருந்தே பிரியங்காவும், ராகுலும் செல்வ செழிப்பிலேயே வளர்ந்தவர்கள்.. பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருந்தாலும், இந்த அளவுக்கு எல்லாம் அவர்கள் இதற்கு முன்பு இழிவுபடுத்தப்பட்டதில்லை.. லத்தி சார்ஜ், போலீஸ் பிடித்து தள்ளிவிடுவது எல்லாம் இப்போதுதான் நடக்கிறது.. அண்ணனின் உடம்பில் காயங்களை கண்டு பிரியங்கா பதறும் இந்த போட்டோவைபார்த்து காங்கிரஸ் தொண்டர்கள் கலங்கி வருகிறார்கள்... இந்த போட்டோவும் தற்போது வைரலாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+