இதுதான் மதநல்லிணக்கம்.. முஸ்லிம் வீட்டில் இந்து பெண்ணுக்கு திருமணம்.. அதுவும் உத்தரபிரதேசத்தில்..!
இந்து பெண்ணுக்கு திருமணம் செய்ய வீடு தந்த முஸ்லிம் குடும்பத்தினர்
லக்னோ: நாடு முழுவதும் மத ரீதியான மோதல்கள் தொடர்ந்து எழுந்து வரும் நிலையில், ஒரு முக்கிய சம்பவம், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. ஏராளமான வரவேற்பையும் பெற்று வருகிறது.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா தொற்று தலைதூக்கியிருந்தது.. இதில் பெருமளவு பாதிக்கப்பட்டது வடமாநில மக்கள்தான்.
குறிப்பாக உத்தரபிரதேசத்திலும் தொற்றுக்கு ஏராளமானோர் பலியானார்கள்.. அந்த வகையில், அல்வால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா முதல் அலையிலேயே இறந்துவிட்டார்.

ராஜேஷ்
அவரது மகள் பூஜா.. உறவினர்களிடன் பாதுகாப்பில் இதுநாள் வரை வளர்ந்து வந்தார் பூஜா.. இந்நிலையில், பூஜாவுக்கு, ராஜேஷ் என்பவரை மணமுடிக்க பெரியவர்கள் பார்த்து திருமணம் நிச்சயம் செய்துள்ளனர்... ஏப்ரல் 22ம் தேதி திருமண தேதியையும் குறித்தனர்.. ஆனால், வீட்டில் தடபுடலாக திருமணம் செய்யும் அளவுக்கு ராஜேஷ் குடும்பத்தினருக்கு பண வசதி இல்லை.

மண்டபம்
அதனால், இவர்களது திருமணத்துக்கு மண்டபமும் ஏற்பாடு செய்ய முடியவில்லை.. குடியிருக்கும் வீடும் மிக சிறியதாக இருப்பதால் திருமணத்தை எப்படி நடத்துவது என்று ராஜேஷ் குழம்பியும் தவித்தும் வந்துள்ளார்.. ராஜேஷ் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, ராஜேஷின் பக்கத்து வீட்டுக்காரரான பர்வேஸ் என்பவருக்கு தெரியவந்துள்ளது... பர்வேஸ், இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்.. ஆனாலும், நீண்ட காலமாகவே இவர்கள் குடும்பத்தினர் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

திருமணம்
அந்த வகையில் ராஜேஷின் மனக்குமுறலை உணர்ந்த பர்வேஸ், தன்னுடைய வீட்டிலேயே கல்யாணத்தை நடத்திக்கொள்ளும்படி சொன்னார்.. அதுவும் பூஜாவுக்கு அப்பா இல்லாததால், பர்வேஸ் மனம் இளகி போனார்.. ராஜேஷ் வாய்விட்டு உதவி என்று கேட்காமலேயே, தன் வீட்டில் திருமணத்தை நடத்துங்கள் என்று சொன்னதை கேட்டு, குடும்பத்தினர் திக்குமுக்காடி போய்விட்டனர்.. அதுமட்டுமல்ல, மணமக்கள் குடும்பத்தினர் இணைந்து, பர்வேஸும் திருமண வேலைகளை முன்னின்று கவனிக்க ஆரம்பித்துவிட்டார்.

திருமண விருந்து
பர்வேஸின் மனைவி நதீரா இதை பற்றி சொல்லும்போது, "பூஜாவும் அவரது அம்மாவும் எங்க வீட்டிற்கு அடிக்கடி வந்து போவார்கள்.. பூஜா எங்களுக்கு மகள் மாதிரி.. முடிந்த உதவியை தான் செய்திருக்கிறோம்.. புனித ரம்ஜான் மாதத்தில் ஒரு மகளின் திருமணத்திற்கு என்ன செய்ய முடியுமே அதை செய்திருக்கிறோம்.. கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்.. ஆனால் மனிதர்களான நாம், நம்முடைடய பெண் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது கடமையாகும்... அதுதான் எல்லாவற்றையும் விட பெரியது... அதைத்தான் நாங்கள் செய்தோம்" என்றார். உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அம்மாநில மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பர்வேஸ் குடும்பம்
"எப்படி திருமணம் செய்வது என்று குழம்பி போயிருந்தோம்.. எங்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து பர்வேஸ் குடும்பத்தினர், தாமாகவே வந்து உதவி செய்தனர்.. கடைசிவரை கல்யாணத்தில் தயக்கமே இல்லாமல் அனைத்தும் செய்து மகிழ்ந்தனர்.. தங்கள் சொந்த வீட்டை திருமணம் செய்ய தந்தது மிகப்பெரிய உதவி.. தன் வீட்டு சொந்த மகளின் திருமணத்தை போல், பூஜாவின் கல்யாணத்தை அவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள்" என்றார்.

சிறுபான்மையினர்
பர்வேஸின் மனைவி நதீரா இதை பற்றி சொல்லும்போது, "பூஜாவும் அவரது அம்மாவும் எங்க வீட்டிற்கு அடிக்கடி வந்து போவார்கள்.. பூஜா எங்களுக்கு மகள் மாதிரி.. முடிந்த உதவியை தான் செய்திருக்கிறோம்.. புனித ரம்ஜான் மாதத்தில் ஒரு மகளின் திருமணத்திற்கு என்ன செய்ய முடியுமே அதை செய்திருக்கிறோம்.. கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்.. ஆனால் மனிதர்களான நாம், நம்முடைடய பெண் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது கடமையாகும்... அதுதான் எல்லாவற்றையும் விட பெரியது... அதைத்தான் நாங்கள் செய்தோம்" என்றார். உத்தரபிரதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் அம்மாநில மக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Click it and Unblock the Notifications