இப்டி ஆயிடுச்சே.. அதுவும் திறந்த ஒரே வாரத்தில்! பாஜக ஆதரவாளர்கள் செயலால் யோகிக்கு நெருக்கடி
லக்னோ: உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்த லுலு மாலுக்கு தடைகோரி பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டர் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
கேரளாவின் கொச்சின் உட்பட உலகம் முழுவதும் 22 நாடுகளில் 230 பிரம்மாண்ட மால்களை நடத்தி வரும் லுலு குழுமம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் மால்களை தொடங்க திட்டமிட்டு உள்ளது.
அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு சென்னையில் புதிய மால் ஒன்றை தொடங்க லுலு குழுமம் முடிவு செய்து இருக்கிறது.

அண்ணாமலை எதிர்ப்பு
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லுலு ஹைபர் மாலை தமிழ்நாட்டில் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் சிறு வணிகர்களுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டில் வைக்க பாஜக அனுமதிக்காது என்றார்.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு
இதனிடையே டெல்லி சென்ற லுலு குழும உரிமையாளர் யூசுப் அலி பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கேரளா மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் லுலு குழுமம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் விளக்கமளித்தார். இதனை கேட்ட பிரதமர் மோடி, உணவு துறையில் லுலு குழுமத்தின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார்.

லக்னோவில் லுலு மால்
இந்த சூழலில் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் லுலு மாலை திறந்து வைத்தார். 2.2 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மாலில் 300 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்ட இந்த மாலில் 3 பேர் தொழுகை நடத்தும் வீடியோவை பகிர்ந்து சமூக வலைதளங்களில் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பு
இதனை தொடர்ந்து தொழுகை நடத்துவதற்கு மாலில் அனுமது கிடையாது என்று லுலு நிறுவனம் அறிவிப்பு பலகையை வைத்தது. இந்த சூழலில், லுலு மாலை புறக்கணிக்க வேண்டும் என்று இந்து மகா சபாவும் வலியுறுத்தி இருந்தது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் லக்னோ லுலு மாலுக்கு எதிராக இந்துத்துவாவினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக #BoyCottLulluMall என்ற ஹேஷ்டேக்கை பாஜக ஆதரவாளர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications