Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்சபா தேர்தலில் போட்டியிடாதது ஏன்? தொகுதி மக்களுக்கு சோனியா காந்தி உருக்கமான கடிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ரேபரேலி தொகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் எம்பியாக இருந்து வரும் சோனியா காந்தி தற்போது தேர்தல் அரசியலுக்கு குட்பை சொல்லிவிட்டு ராஜ்யசபா எம்பியாக தேர்வாக உள்ளார். இந்த நிலையில் தான் ராஜ்யசபா எம்பியாக முடிவு செய்தது ஏன் என்பது உள்பட பல்வேறு உருக்கமான தகவல்களுடன் கூடிய கடிதத்தை ரேபரேலி தொகுதி மக்களுக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‛இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற பணிகளை தொடங்கிவிட்டன.

 Health issues and increasing age Sonia Gandhi writes emotional letter to people of RaeBareli

வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடவில்லை என்று தெரியவந்துள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை என்றும் மாறாக அவர் ராஜ்யசபா எம்பியாக திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன.

ராஜ்ய சபா எம்பி: இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக சோனியா காந்தி போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன் மூலம் சோனியா காந்தி தேர்தல் அரசியலுக்கு குட்பை சொல்லியிருக்கிறார். ராஜஸ்தானை பொறுத்தமட்டில் இப்போது 3 ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த மாநில எம்எல்ஏக்களின் அடிப்படையில் பார்த்தால் பாஜகவுக்கு 2 எம்பிக்கள் கிடைக்கும்.

மாறாக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி கிடைப்பது உறுதியாகி உள்ளது. அந்த வாய்ப்பில் தான் சோனியா காந்தி ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா எம்பியாக நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் ரேபரலி தொகுதியில் சோனியா காந்தி, 4 முறை தொடர்ந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உருக்கமான கடிதம்: அதாவது, சோனியா காந்தி கடந்த 1999-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல் முறையாக போட்டியிட்டார். பின்னர் 2004 ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மாறினார். அப்போது முதல் தொடச்சியாக ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். ஆனால் இந்த முறை ராஜ்யசபா எம்பியாக தேர்வு ஆக உள்ளதால், ரேபரேலி தொகுதியில் வேறு ஒரு வேட்பாளர் காங்கிரஸ் சார்பில் களம் காண்பது உறுதியாகியுள்ளது.

இதனிடையே, தனது தொகுதி வாக்காளர்களுக்கு சோனியா காந்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சோனியா காந்தி கூறியிருப்பதாவது:- நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அது உங்களாலேயே என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களின் நம்பிக்கையை பெறும் வகையில் என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் நான் செய்து வருகிறேன்.

உறவு மிக ஆழமானது: தற்போது எனது உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னால் நேரடியாக உங்களுக்கு (தொகுதி வாக்காளர்களுக்கு) சேவை செய்ய முடியாது என்றாலும் எனது எண்ணங்களும் மனதும் எப்போதும் உங்களுடனேயே இருக்கும். ரேபரேலி தொகுதியுடன் எங்கள் குடும்பத்தின் உறவு மிகவும் ஆழமானது. நாடு சுதந்திரமடைந்த பிறகு நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில் எனது மாமனார் பெரோஸ் காந்தியை வெற்றி பெற செய்து நீங்கள் டெல்லிக்கு அனுப்பி வைத்தீர்கள்.

அதற்கு பிறகு எனது மாமியார் இந்திரா காந்தி வெற்றி பெற செய்தீர்கள். பின்னர் இந்த பிரகாசமான பாதையில் நடக்க நீங்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள். கடந்த இரண்டு தேர்தல்களில் இக்கட்டான சூழ்நிலையிலும் கூட எனக்கு ஆதரவாக நீங்கள் காட்டிய உறுதியை நான் ஒருபோதும் மறக்கவே மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+