லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நலந்தானா.. நலந்தானா.. வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடிய ஹேமமாலினி!

Google Oneindia Tamil News

Recommended Video

    வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடிய ஹேமமாலினி!

    பிருந்தாவன், உ.பி.: 70 வயசா இவருக்கு.. சொன்னால்தான் தெரிகிறது வயது. பார்த்தால் வயது தெரியாத இளமையுடன் இன்னும் வசீகரிக்கிறார் ஹேமமாலினி.

    ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் ஹேமமாலினி. நடிப்பு ஒரு அடையாளம் என்றால் நடனம் இவரது இன்னொரு அடையாளம். கொள்ளை அழகுடன், நல்ல நடனக்காரராகவும், நடிகையாகவும் வலம் வந்த ஹேமமாலினி இப்போது பாஜக எம்பி.

    Hemamalini awes in her dance in Vrindavan temple fest

    எத்தனையோ சர்ச்சைகளில் இவர் சிக்கினாலும் இவருக்குண்டான கிரேஸ் இன்னும் போகவில்லை. இதற்கு நேற்றைய தினம் உ.பி. மாநிலம் பிருந்தாவனில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியே நல்ல உதாரணம். ஹரியாலி தீஜ் என்ற விழாவின் ஒரு பகுதியாக பிருந்தாவனில் உள்ள ஸ்ரீராதா ராமன் கோவிலில் ஒரு நடன நிகழ்ச்சி நடந்தது.

    ஹேமமாலினி கலந்து கொண்டு அதில் நடனமாடினார். இவருக்கா வயது 70 என்று வாய் பிளந்து ஆச்சரியப்படும் வகையில் அவரது நடனம் அத்தனை அழகாக இருந்தது. இசைக்கும், பாடலுக்கும் ஏற்ப வளைந்து வெளிந்து வசீகரமாக ஆடினார் ஹேமா.

    பெரும் திரளாக கூடியிருந்த கிருஷ்ண பக்தர்கள் ஹேமாவின் இந்த நடனத்தைப் பார்த்து வியந்து ரசித்தனர். வெறுமனே உடலை அசைத்து ஆடாமல் பாடலுடன் ஐக்கியமாகி லயித்துப் போய் ஆடியதுதான் ஹேமமாலினியின் விசேஷமே. முதலில் விநாயகர் துதி நடனம், பிறகு கிருஷ்ண நடனம் என விதம் விதமாக ஆடி பக்தர்களை மகிழ்வித்தார் ஹேமமாலினி.

    சிவப்பு நிற லெஹங்காவுடன், கனத்த நகைகள், வளையல்கள் என ஏகப்பட்ட வெயிட்டான ஐட்டங்களை அணிந்தும் கூட அதைப் பொருட்படுத்தாமல் ஹேமமாலினி உற்சாகத்துடன் ஆடியது, அனைவரையும் குஷிப்படுத்தியது.

    வயசுக்கும் மனசுக்கும் சம்பந்தமே இல்லை... ஹேமமாலினி உணர்த்தியது அதைத்தான்.

    English summary
    BJP MP and yesteryear actress Hema Malini performed at Sri Radha Raman Temple in Vrindavan during 'jhulan utsav' on the eve of Hariyali Teej.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X