பட்ட நொடி.. தலையை ஆட்டி உறுதியாக சொன்ன ரஹானே.. ரிப்ளேவில் நடந்த பரபரப்பு.. சிஎஸ்கே மேட்சில் ட்விஸ்ட்
லக்னோ: சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான மேட்ச் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கத்திலேயே வரிசையாக விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி திணறி வருகிறது.
ஐபிஎல் 2023 தொடரில் அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியையும் சேர்த்து மீதம் உள்ள 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் ஆகாஷ் சிங் நீக்கப்பட்டு உள்ளார். சாகர் காயத்தில் இருந்து மீண்டு வந்து உள்ளார்.
இதனால் அணியில் சாகர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இன்று ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(வ/சி), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் சிஎஸ்கே அணியில் இடம்பெற்று உள்ளனர்.
இன்று டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங் தேர்வு செய்தது. இன்றைய மேட்சில் பிட்ச் மிகவும் ஸ்லோ பிட்சாக இருக்கும் என்பதால் குறைந்த ரன் திரில்லராக இந்த ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பேட்டிங் செய்வதும் மிகவும் கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படியே தொடக்கத்தில் இருந்தே வரிசையாக லக்னோ டாப் ஆர்டர் வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். நான்காவது ஓவரிலேயே மொயின் அலி பந்தில் கைலி மையர்ஸ் அவுட் ஆனார்.
அப்போதே பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருப்பது தெரிந்தது. அதன்பின் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தீக்சனா வீச 5.4 ஓவரில் வோஹ்ரா, 5.5ல் குர்ணால் பாண்டியா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இதில் குர்ணால் பாண்டியா பேட்டில் பந்து எட்ஜாக அதை ரஹானே லாவகமாக பிடித்தார். ஆனால் அவர் கையில் படும் முன் பந்து தரையில் பட்டது போல இருந்தது.
ஆனால் ரஹானே உறுதியாக அவுட் என்பது போல தலையை ஆட்டி சிக்னல் கொடுத்தார். அதன் போலவே பந்து தரையில் படமால் நேரடியாக ரஹானே கையில் ரிப்ளேயில் தெரிந்தது. பந்துக்கு கீழ் விரல்கள் இருந்தது.
அதற்கு அடுத்த ஓவரிலேயே ஜடேஜா ஓவரில் ஸ்டோனிஸ் அவுட் ஆனார். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மேட்ச் ட்விஸ்ட் ஆகி ஆட்டம் சிஎஸ்கே வசம் வந்தது.
சிஎஸ்கே மேட்ச் :

2023 ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வந்த சிஎஸ்கே அணி தற்போது தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்க தொடங்கி உள்ளது.
2023 ஐபிஎல் சீசன் எதிர்பார்ப்பை விஞ்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. சிஎஸ்கே கேப்டன் தோனியின் கடைசி சீசனாக இது பார்க்கப்படுகிறது தற்போது புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 4ம் இடத்தில உள்ளது.
இதுவரை 9 போட்டிகளில் ஆடிய சிஎஸ்கே அணி 4 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளது.
அதை தவிர மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே என்று டாப் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் எல்லாம் சிஎஸ்கே எளிதாக வென்றுவிட்டது.
இந்த நிலையில் கடைசியாக பஞ்சாப் அணியிடம் எதிர்பாராமல் தோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி.












Click it and Unblock the Notifications