இவ்வளவு கோடியா? குமரி டூ காஷ்மீர்.. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஆன செலவு இதுதான்.. அடேங்கப்பா!
லக்னோ: ராகுல் காந்தி 2வது கட்டமாக மணிப்பூரில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கி உள்ளார். முன்னதாக அவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட நிலையில் அதற்கு காங்கிரஸ் செலவழித்த தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி தனது 2.0 யாத்திரையை தொடங்கி உள்ளார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை இந்த யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறது.

கடந்த மாதம் இந்த யாத்திரையை ராகுல் காந்தி மணிப்பூரில் தொடங்கினார். மொத்தம் 66 நாட்கள் நடக்கும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி 6,713 கிலோமீட்டர் தொலைவை கடந்து மார்ச் மாதம் 20ம் தேதி மும்பையில் முடிக்கிறார். இந்த யாத்திரை என்பது மொத்தம் 15 மாநிலங்கள் வழியாக நடைபெற உள்ளது.
அதன்படி மணிப்பூர், நாகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. தற்போது யாத்திரை மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வருகிறது.
சரி இது இருக்கட்டும். இந்த யாத்திரைக்கு முன்பாக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். 2022 செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவை ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நடந்தே கடந்தனர்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சி செலவு செய்த தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆண்டுதோறும் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் தாங்கள் செலவிட்ட தொகை குறித்த விபரங்களை சமர்பிக்க வேண்டும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 2022-2023ம் ஆண்டுக்கான வரவு-செலவு தொகை குறித்த விபரம் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் தான் ராகுல் காந்தியின் முதல் யாத்திரையான பாரத் ஜோடோ யாத்திரைக்கு செலவு செய்யப்பட்ட விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சமர்ப்பித்த ஆடிட் தொடர்பான அறிக்கையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு மொத்தம் ரூ.71.8 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சி செலவு செய்த மொத்த தொகையில் 15.3 சதவீதமாகும். மேலும் 2022-23ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலுக்கு ரூ.199 கோடியை செலவு செய்துள்ளது. இதுதவிர பிற செலவுகளையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் காங்கிரஸ் கட்சி ரூ.467 கோடி செலவு செய்துள்ளது.
இப்படி செலவு அதிகரித்தாலும் கூட காங்கிரஸ் கட்சியின் வருவாய் என்பது சரிந்துள்ளது. அதாவது 022-23ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு வருவாயாக ரூ.452 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அதோடு கடந்த 2021-22ம் ஆண்டில் ரூ.541 கோடி வருவாயாக கிடைத்த நிலையில் அது 2022-2023ம் ஆண்டில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications