ரண களத்திலும் கிளுகிளுப்பா.. இவரன்றோ சூப்பர் கணவர்.. மனைவிக்கு எப்படி கத்து கொடுக்கிறார் பாருங்க!
வீட்டுக்குள் புகுந்த நீரில் மனைவிக்கு கணவன் நீச்சல் கற்று தருகிறார்
Recommended Video
லக்னோ: "இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்குதா" என்ற வரிகளுடன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நாட்டின் நிறைய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பெருக்கெடுத்து வரும் வெள்ள நீரினால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி என்றாலும், இதனால் பொதுமக்கள் சில சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் தண்ணீர் உள்ளே புகுந்து கொண்டு விடுகிறது. அதை வெளியேற்றவும் முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் அனைத்தும் கடுமையான மழையால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. என்ன செய்வதென்றே தெரியாமல், இயல்பு வாழ்க்கை கெட்டு போய் மக்கள் விழிபிதுங்கி உள்ளனர்.
இவ்வளவு ரணகளம் நடக்கும்போதுதான், ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஏதோ ஒரு வீட்டிற்குள் மழை நீர் புகுந்து விட்டது. இடுப்புக்கு மேல் தண்ணீர் வீட்டிற்குள் நிறைந்து காணப்படுகிறது. அந்த தண்ணீரை எடுத்து வெளியில் ஒரு தம்பதி ஊற்றி கொண்டிருக்கிறார். கணவன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென மனைவிக்கு அந்த தண்ணீரில் நீச்சல் சொல்லி தர ஆரம்பித்துவிட்டார்.
இவ்வளவு ரனகளத்துலையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்க்குது .. மூமெண்ட்😜 pic.twitter.com/tTRIRBfkg2
— ஆஹான்!! 😉 (@Kadhar_Twitz) September 27, 2019
மனைவியை கைத்தாங்கலாக தண்ணிக்குள் பிடித்துக் கொள்ள.. மனைவியும் அந்த தண்ணீரில் நீச்சல் அடித்து மகிழ்கிறார். இருவருமே நீச்சலடிப்பது தங்கள் வீட்டுக்குள் புகுந்திருக்கும் மழை நீரில்தான் என்பதை மறந்துவிட்டது போல அவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள். இதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து, இணையத்திலும் போட்டுள்ளனர். "இவ்வளவு ரணகளத்துலையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்க்குது" என்றும் வரிகள் உள்ளன.
இது கிளுகிளுப்பு என்று எடுத்து கொண்டாலும், இன்னொரு பக்கம் பாசிட்டிவ் திங்கிங் என்றுகூட சொல்லலாம். ஐயோ.. வீடெல்லாம் தண்ணீர் ரொம்பி கிடக்கிறதே என்று புலம்பி அழுது ஒப்பாரி வைக்காமல், ஒரு பக்கம் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டே.. பொண்டாட்டிய நீச்சலடிக்க விட்டு புருஷன் என்ஜாய் பண்ணுவது ஒரு அழகுதான்! நாம் பார்க்கும் பார்வையில்தான் எல்லாமே அடங்கி உள்ளது!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications