மசூதியை புல்டோசர் கொண்டு இடித்த அதிகாரிகள்.. உத்தர பிரதேசத்தில் என்ன நடந்தது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சாம்பால் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறி மசூதி இடிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இந்த மசூதியை இடித்த நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

in-uttar-pradesh-mosque-demolished-after-declaringthe-construction-illegal

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். மாநிலத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து உரிய அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் சாம்பால் மாவட்டம் அஸ்மோலி பகுதியில் உள்ள குதுப்பூர் சட்டா கிராமத்தில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சன்னி மத்திய வக்ஃபு வாரியத்தின் அனுமதி பெறாமல் வக்ஃபு சொத்தில்இந்த மசூதி கட்டப்பட்டாதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி புகாரின் அடிப்படையில் கலெக்டர் அங்கித் கண்டேல்வால் விசாரணை நடத்தும்படி வக்ஃபு வாரியத்துக்குஉத்தரவிட்டார். அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். மசூதியின் முத்தவல்லியான இர்ஷாத்துக்கு நோட்டீஸ் அனுப்பி ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

அப்போது அந்த மசூதி வக்ஃபு சொத்தாக பதிவு செய்யப்பட்டுள்ள 130 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டியதும், அதன்பிறகு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்ததும் தெரியவந்தது. ஆனால் மசூதி கட்டுமானத்திற்கு யாரிடமும் அனுமதி பெறவில்லை. மசூதி கட்டுமான பணி தொடர்பான அனுமதி ஆவணங்களையும் வழங்கவில்லை.

இதையடுத்து மாவட்ட சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் விகாஸ சந்திரா மற்றும் தாசில்தார் தீரேந்திர குமார் சிங் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த மசூதி அதிகாரிகளால் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் 10 போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதுதவிர பிஏபி பிளட்டூன் வீரர்களும் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் கட்டடங்களின் மீது ஏறி நின்று கண்காணித்தனர். ட்ரோன்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

சாம்பல் தாசில்தார் தீரேந்திர பிரதாப் சிங் கூறுகையில், ''150 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நிலம் 'கா' பிரிவின57 வது நிலப்பிரிவின் கீழ் வருகிறது. இங்குள்ள பழைய கட்டடம் 15 முதல் 20 ஆண்டுகள் பழமையானது. ஆனால் புதிதாக கட்டுமான பணிகள் நடந்து முடிந்தது. தனியாக தொழுகையும் நடத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த நிலத்தில் புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள எந்த அனுமதியும் வழங்கப்படாத நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதுபற்றி அஸ்மோலி சர்க்கிள் அலுவலர் அமன் சிங்கூறுகையில், ''குதுப்பூர் சட்டா கிராமத்தில் மக்கள் பயன்பாட்டுக்கான பொது இடத்தில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்பட்டுள்ளதாக போலீசார் மற்றும் வருவாய் அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து போலீஸ் - வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு செய்தோம். அப்போது மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதன்பிறகு மாவட்ட சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் உத்தரவின்படி இந்த மசூதி இடிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+