டபுள் என்ஜின் இல்லை.. ட்ரிபிள் என்ஜின் அரசு உ.பியில் விரைவில் அமையும்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் இன்று தொடங்கும் நிலையில், மாநிலத்தில் டபுள் என்ஜின் அரசுக்கு பதிலாக ட்ரிபிள் என்ஜின் அரசு அமையும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நீடித்ததில்லை. இப்படி இருக்கையில் யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகளை கடந்து முதலமைச்சராக நீடித்து வருகிறார். இது அம்மாநிலத்தில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக பல்வேறு திட்டங்களை யோகி அறிவித்து வருகிறார். அதேபோல ஏற்கனவே அறிவிக்கப்பட்டு முடிக்கப்பட்ட திட்டங்களையும் தொடக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அதாவது, "உத்தரப் பிரதேசத்தில் கல்விக்கு என அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 880 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளை மேம்படுத்த முதற் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிஜமாகவே மிகப்பெரிய தொகையாகும். அதேபோல 704 பள்ளிகள் அடுத்தக்கட்டத்திற்கு தரம் உயர்த்தப்படுகின்றன. தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது.
ஆனால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் ஒவ்வொரு நடுநிலை பள்ளிகளிலும் சுமார் 450 மாணவர்கள் பயிலும் அளவுக்கு பள்ளிகள் மேம்படுத்தப்படும். சத்துணவுத் திட்டம், வைஃபை & ஆன்லைன் சிசிடிவி கண்காணிப்பு, விளையாட்டு மைதானத்துடன் கூடிய பல செயல்பாட்டுக் கூடம் மற்றும் நவீன தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் பள்ளிகள் மேம்படுத்தப்படும். தொடக்க கல்வியை தவிர உயர்கல்வியை மேம்படுத்தவும் பாஜக அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
நாங்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம் என்று கூறியிருந்தோம். நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா இதற்கான திட்ட வரைவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆக நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம். எனவே எங்களை மக்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற செய்வார்கள். டபுள் என்ஜின் என்கிற அமைப்பையும் தாண்டி ட்ரிபிள் என்ஜின் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் அமையும்" என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications