Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி. தேர்தல் நெருங்கும் நிலையில்.. அகிலேஷ் யாதவ் உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

உ.பி மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமே இந்த சட்டசபை தேர்தலை எதிர்பார்த்து வரும் நிலையில் அங்கு மீண்டும் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்று பா.ஜ.க தீவிரமாக இருக்கிறது. எதிர்க்கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சிக்கு வர துடிக்கிறது. இந்த முறை அதியசம் நிகழ்த்த வேண்டும் என்று காங்கிரசும் நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

மக்களை வசியப்படுத்தும் பணிகள்

மக்களை வசியப்படுத்தும் பணிகள்

மேற்கண்ட இந்த மூன்று கட்சிகளும் தேர்தலுக்காக இப்போது இருந்தே மக்களை வசியப்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டன. ஆளும் கட்சியான பாஜக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பிரதானமாக வைத்து வாக்கு சேகரித்து வருகிறது. சமாஜ்வாடி கட்சியை பொறுத்தவரை ஆளும் அரசின் திறமையற்ற நிர்வாகம், தோல்வியுற்ற திட்டங்கள் குறித்து மக்கள் மனதில் பதிய வைத்து வருகிறது.

 அகிலேஷ் யாதவின் உதவியாளர்

அகிலேஷ் யாதவின் உதவியாளர்

காங்கிரஸ் பக்கம் சென்றால் பிரியங்கா காந்தி ஏற்கனவே உ.பி.யில் முகாம் முகாமிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னின்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார். இப்படி தேர்தலுக்காக மும்முனை கட்சிகள் தயாராகி வரும் நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவின் உதவியாளர் வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

வருமான வரித்துறை சோதனை

வருமான வரித்துறை சோதனை

வாரணாசியில் இருந்து வந்த வருமான வரித்துறையின் குழுவினர் கிழக்கு உ.பி.யின் மாவ் மாவட்டத்தில் உள்ள அகிலேஷ் யாதவின் உதவியாளரும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான ராஜீவ் ராயின் வீட்டில் சோதனை நடத்தினார்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

கருத்து கூறி இருந்தார்

கருத்து கூறி இருந்தார்

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அகிலேஷ் யாதவின் உதவியாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது உ.பி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் உ.பி.யில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இது குறித்து கருத்து கூறிய ராஜீவ் ராய் ''இந்த திட்டங்கள் அனைத்தும் சமாஜ்வாடி ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டவை'' என்று கூறி இருந்தார்.

கட்சியின் முதுகெலும்பு

கட்சியின் முதுகெலும்பு

இதுபோல் விளம்பரம் தேடுவது பாஜகவின் வழக்கமாகி விட்டது என்றும் விமர்சனம் வைத்திருந்தார். இந்த நிலையில்தான் ராஜீவ் ராய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயலாளரான ராஜீவ் ராய், கட்சியின் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார். 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி வெற்றி பெற முக்கிய காரணமே இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+