பழ ஜூசில் யூரின் கலந்து விற்ற கடைக்காரர்.. விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: காசியாபாத்தில் உள்ள சாலையோர ஜூஸ் கடையில், வாடிக்கையாளர்களுக்கு ஜூஸ் உடன் யூரின் கலந்து விற்பனை செய்யப்பட்டது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளரையும் கடையில் வேலை பார்க்கும் 15 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜூஸ் கடை ஒன்று உள்ளது. சாலையோரம் அமைந்துள்ள இந்த ஜூஸ் கடையில் வெயிலுக்கு இதமாக ஆரஞ்ச், எலுமிச்சை ஜூஸ்கள் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இந்தக் கடையில் 15 வயது சிறுவன் ஒருவன் வேலை செய்து வருகிறான்.

fruit juice weird trend

கடையில் ஜூஸ் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள், ஜூஸில் மஞ்சள் நிறத்தில் திரவம் ஒன்றை கலப்பதை கவனித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக ஜூஸில் என்ன கலக்கப்படுகிறது என பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது ஜூசில் சிறுநீர் கலக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஜூஸ் கடையில் சென்று சோதனை செய்தனர். அப்போது கடைக்காரர் பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீரை பிடித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக கடை உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதேபோல கடையில் வேலை பார்த்த 15 வயது சிறுவனையும் போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். ஜூஸில் சிறு நீர் கலந்து கொடுக்கப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதற்கிடையே, ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுத்த தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடையில் வேலை பார்ப்பவர்களை தாக்கினர். இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி அன்கூர் விஹார் பாஸ்கர் கூறுகையில், "உள்ளூர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கடை உரிமையாளரான அமீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் போலீசார் நடத்திய சோதனையில் யூரின் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் டப்பாக்கள் கைப்பற்றப்பட்டது. கடை உரிமையாளரிடம் இதுபற்றி விசாரித்து வருகிறோம்" என்றார்.

ஜூஸ் உடன் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியாக உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தெலுங்கானாவில் ஐஸ்கிரீம் கடையில் விற்பனையாளர் சுயஇன்பம் செய்து விந்தணுவை ஐஸ்கிரீம் உடன் கலந்து கொடுத்த வீடியோ வைரல் ஆனது.

இணையத்தில் இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சாலையோர கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+