நுபுர் சர்மாவை தொடர்ந்து.. நபிகள் நாயகம் மீது அவதூறு கருத்தை பரப்பிய கான்பூர் பாஜக நிர்வாகி கைது
லக்னோ: இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்ததாக கான்பூரை சேர்ந்த பாஜக தலைவர் ஹர்ஹித் ஸ்ரீவத்சவா கைது செய்யப்பட்டார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்தவர் நுபுர் சர்மா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞானவாபி வழக்கு குறித்து விவாதத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்திருந்தார். இது பெரிய சரச்சையை ஏற்படுத்தியது.

கருத்து
இதனிடையே இவரது கருத்தை நியாயப்படுத்தினார் டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால்.. இதையடுத்து இருவருக்கும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரையும் பாஜக தலைமை பதவி நீக்கம் செய்தது. இந்தியாவை ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்கள் நபிகள் நாயகத்திற்கு எதிராக பேசியதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்திய தூதர்
இதற்காக இந்தியாவின் தூதருக்கு குவைத், கத்தார், ஈரான், பஹ்ரைன், சவுதி உள்ளிட்ட அரசுகள் சம்மன் அனுப்பின. மேலும் குவைத் அரசோ இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. சவூதியில் இந்திய பொருட்களின் விற்பனை முடக்கப்பட்டது. இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் அரபு நாடுகள் முன் வந்துவிட்டன.

நுபுர் சர்மா
இந்த நிலையில் நுபுர் சர்மாவின் கருத்தை கண்டித்து உத்தரப்பிரதேசம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லீம் அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையும் மீறி கான்பூர் பரேட் சந்தையில் கடைகள் திறந்திருந்ததால் கடைகளை மூடுமாறு முஸ்லீம் அமைப்பினர் வலியுறுத்தினர்.

கான்பூர் வன்முறை
ஆனால் கடைகளை மூட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 100 க்கும் மேற்பட்டோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கலலரம் வெடித்தது. பின்னர் தகவலறிந்த போலீஸார் போராட்ட களத்திற்கு வந்து தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர். எனினும் அடுத்த நாளும் இந்த வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

கான்பூர் பாஜக நிர்வாகி கைது
இந்த நிலையில் கான்பூரை சேர்ந்த பாஜக இளைஞரணி உறுப்பினர் ஹர்ஷித். இவர் கான்பூர் மோதலை தொடர்ந்து நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதை அவர் டெலிட் செய்துவிட்டார். இதையடுத்து போலீஸார் ஹர்ஷித்தை கைது செய்தனர். உ.பி. அரசின் கொள்கையின்படி மத கலவரத்தை தூண்டி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications