30 மணி நேரமாக ஒரே அறையில் அடைபட்ட பிரியங்கா.. மேலே பறந்த "மர்ம டிரோன்".. என்ன நடக்கிறது உ.பியில்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி அடைக்கப்பட்டு இருக்கும் விடுதிக்கு டிரோன் ஒன்று பறந்து கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் லக்கிம்பூரில் கேரி மாவட்டத்தின் நேற்று முதல்நாள் திகுனியாபகுதியில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா, துணை முதல்-அமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளும் பாஜக கட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் நடத்திய கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது.
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் கார் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் 4 விவசாயிகள், 1 செய்தியாளர், பொதுமக்கள் உட்பட 9 பேர் பலியானதாக சம்யுக்தா கிசான் மோச்சா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது அங்கு வந்த பாஜகவினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.

தடுக்கப்பட்டார்
இந்த நிலையில் லக்கிம்பூரில் உள்ள கிராமத்திற்கு விவசாயிகளை சந்திக்க பிரியங்கா காந்தி செல்ல முயன்ற போது அவர் போலீசார் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டார். சிதாபூர் என்ற கிராமத்தில் இவர் தடுத்து நிறுத்தப்பட்டு விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டார். கடந்த 30 மணி நேரமாக ஒரே அறையில் இவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

பிரியங்கா
இந்த நிலையில் பிரியங்கா காந்தி அடைக்கப்பட்டு இருக்கும் விடுதிக்கு மேலே கடந்த சில மணி நேரங்களாக டிரோன் ஒன்று பறந்து கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரியங்கா காந்தி இருக்கும் அறைக்கு மேலே சரியாக கடந்த 2 மணி நேரமாக இந்த டிரோன் பறந்து கொண்டு இருக்கிறது. இதை போலீசார் பறக்க விடுகிறார்களா அல்லது வேறு யாராவது பறக்க விடுகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
டிரோன்
முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் இருக்கும் இடத்திற்கு மேல் இப்படி டிரோன் பறப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இது பாதுகாப்பு நடவடிக்கையா அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக இப்படி டிரோன் பறக்க விடுக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. பிரியங்கா காந்தி இருக்கும் அறைக்கு மேலே இப்படி டிரோன் பறப்பதை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் வைத்து வருகிறார்கள்.

என்ன நடக்கிறது?
உத்தர பிரதேசத்தில் என்ன நடக்கிறது? மூத்த அரசியல் தலைவருக்கு கூட பாதுகாப்பு இல்லையா? என்று காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் பிரியங்கா காந்தி தன்னை அடைத்து இருப்பது ஏன் என்று பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். மோடி சார், உங்களுடைய அரசு என்னை கடந்த 28 மணி நேரமாக கஸ்டடியில் வைத்து இருக்கிறது.

எப்ஐஆர்
எந்த உத்தரவும், எப்ஐஆரும் இன்றி என்னை கஸ்டடியில் வைத்து இருக்கிறார்கள். ஆனால் விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை யாருமே இன்னும் கைது செய்யவில்லை ஏன் என்று சொல்லுங்கள்? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications