குண்டை தூக்கி போட்ட பாஜக தலைவர்.. ராமருக்கு அப்பா தசரதன் இல்லையாமே.. வெடித்தது சர்ச்சை

ராமர் குறித்து சர்ச்சை கருத்து கூறியுள்ளார் உபி பாஜக கூட்டணி தலைவர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார் பாஜக தலைவர் ஒருவர்.. ராமர் அயோத்தியிலேயே பிறக்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், ராமருக்கு அப்பா தசரதன் இல்லை என்று கூறியுள்ளார். இதுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது.

உபி முதல்வர் யோகி ஒருவித குறிக்கோளுடன் பயணித்து வருகிறார். எப்படியும் ராமராஜ்ஜியம் அமைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கான வேலைகளிலும் மும்முரமாகி வருகிறார்.

Lord Ram was not son of Dashrata says, UP BJP ally leader Sanjay Nishads

மேலும், ராமர் பிறந்த அயோத்தியில் பாஜக அரசு பிரமாண்டமான கோவில் ஒன்றையும் கட்டி வருகிறது... எனினும் அடிக்கடி ராமர் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருவது இயல்பான ஒன்று.

அதிலும் ராமர் பிறந்த இடம்குறித்து இன்றுவரை விவாதம் ஓயவில்லை.. நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒருமுறை இதுகுறித்து பேட்டி தந்திருந்தார். அதில், "ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை.. காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம்.. ஆக, ராமர் ஒரு இந்தியர் இல்லை.. அவர் ஒரு நேபாளி" என்று கூறியிருந்தார்,

இந்த பேச்சு பல்வேறு அதிருப்திகளையும் விமர்சனங்களையும் பெற்றது.. இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.. இந்நிலையில், இங்குள்ள பாஜக கூட்டணி தலைவர் ஒருவரே, மறுபடியும் ராமர் பிறப்பு பற்றி கருத்தை கூறியுள்ளார்.. உபியில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் ராமரை பற்றி சொன்னதாவது: "ராமர் தசரதன் மகன் கிடையாது.. நிஷாத் குடும்பத்தில் பிறந்தவர்" என்றார். சஞ்சய் நிஷாத்தின் இந்த கருத்து சர்ச்சையாகி உள்ளது.

இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் அன்ஷு அவாஸ்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.. அதேபோல,
ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி இது பற்றி சொல்லும்போது, "டிஎன்ஏ நிபுணரான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நிஷாத் கட்சி தலைவர் கருத்து குறித்து விளக்க வேண்டும்... பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர்கள் இதுகுறித்து பேச வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார். வரப்போகும் தேர்தலுக்கு உபி அரசு தயாராகிவரும் நிலையில், இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+