ஆமா.. மாப்பிள்ளை மண்டையை யாருய்யா இப்படி வழிச்சு எடுத்தது!
வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை தலையில் பாதி மொட்டை அடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

லக்னோ: இந்த ஐடியா இவ்வளவு காலமா பாதிக்கப்பட்ட நம்ம பொண்ணுங்களுக்கு தோணாம போயிடுச்சேன்னு கவலையா இருக்கு.
வேற ஒண்ணுமில்லை. லக்னோவை சேர்ந்த ஒரு இளைஞருக்கு வீட்டு பெரியவர்கள் ஒரு பெண்ணை பார்த்துபேசி முடித்தார்கள். இருவீட்டிலும் சம்மதம்தான். பொண்ணு, மாப்பிள்ளைக்கும் சம்மதம்தான். திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. கல்யாண வேலைகள் பரபரப்பாக நடந்தது. பத்திரிகையும் ஊர் முழுக்க கொடுத்து இரு வீடுகளுமே களை கட்டியது.

பைக், தங்கசெயின்
திருமண நாள் நெருங்கி கொண்டே வந்தது. அப்போதுதான் மாப்பிள்ளை தன் வேலையை காட்ட தொடங்கினார். தனக்கு பைக்கும், தங்க செயினும் கொடுத்தால்தான் தாலி காட்டுவேன் என்றார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டாரோ, இப்படி திடீர்னு வந்து பைக்கும், செயினும் கேட்டால் நாங்க எங்க போறது? எங்களால முடியாத சூழ்நிலை என்றனர். அதனால் மாப்பிள்ளை வேறு விதமாக மிரட்ட தொடங்கினார்.

கலக்கத்தில் பெண் வீட்டார்
பைக்கும், செயினும் தரலைன்னா, கல்யாணத்தையே நிறுத்திடுவேன்னு மிரட்டினார். இதை கேட்டு இன்னும் மிரண்டனர் பெண் வீட்டார். கல்யாணத்துக்கு 5 நாள் இருக்கும்போது மாப்பிள்ளை இப்படி சொல்லிவிட்டதால் கலக்கமடைந்தனர். கிட்டத்தட்ட திருமணமும் நின்று போகும் நிலைமைக்கு வந்துவிட்டது.

பாதி மொட்டை
இதனிடையே குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த மணமகனுக்கு யாரோ தலையில் பாதி மொட்டை அடித்து வைத்திருக்கிறார்கள். இப்படி பாதி மண்டையை வழித்து எடுத்தது யார் என்றே தெரியவில்லை. உடனே மணமகனின் பாதித்தலை மொட்டை அடிக்கப்பட்டது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும் மணமகள் வீட்டாரிடம் விசாரித்தனர்.
|
மொட்டை அடிச்சது யார்?
அப்போது, "எங்களுக்கும் தெரியாது. கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்ணார், எங்களுக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. ஆனால் மொட்டை யார் அடிச்சாங்கன்னு தெரியல, எப்படி பார்த்தாலும் இதுமாதிரி வரதட்சணை பேய்களுக்கு இது சரியான தண்டனை" என்றனர். என்றாலும் போலீசார் மாப்பிள்ளைக்கு பாதி மொட்டையை அடிச்சது யார் என்று தெரியாமல் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications