மாமியார் மூக்கை கடித்து துப்பிய மருமகன்.. காதை அறுத்த சம்பந்தி.. குடும்பமாடா இது!
மாமியாரின் மூக்கை மருமகன் கடித்து துப்பி உள்ளார்
லக்னோ: மகளை சித்ரவதை செய்த மருமகனை தாறுமாறாக திட்டினார் மாமியார்.. இதில் ஆத்திரமடைந்த மருமகன், மாமியார் மூக்கை பிடித்து கடித்துவிட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நகட்டியா என்ற பகுதியில் வசித்து வருபவர் கந்த ரகுமான். இவரது மகள் சாந்த்பி. முகமது அஷ்பாக் என்பவருடன் மகளுக்கு ஒரு வருஷத்துக்கு முன்பு கல்யாணம் செய்து வைத்தார்.

மகளுக்காக ரகுமான் 10 லட்சம் ரூபாயை வரதட்சணையாகவும் தந்திருந்தார். இந்நிலையில், ஒரு வருடம் கழித்து முகமது, மனைவியிடம் திரும்பவும் வரதட்சணை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதற்கு மனைவி மறுப்பு சொல்லி உள்ளார். ஆனால் ரூ. 5 லட்சம் மேற்கொண்டு வரதட்சணை பணம் வந்தாக வேண்டும் என்று கண்டிஷனாக முகமது சொல்லியும், மனைவி கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முகமது, மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார்.
இந்த விஷயம், ரகுமானுக்கு தெரியவந்தது. மகளை, மருமகன் அடித்து கொடுமைப்படுத்துகிறார் என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி, குல்ஷானுடன் மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது இருவீட்டாரும் வரதட்சணை பற்றி பேச.. அது காரசார விவாதமாக மாறியது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தில் கடுப்பான முகமது, தன்னுடைய மாமியார் குல்ஷானின் மூக்கை கடித்துவிட்டார். அத்துடன் விடவில்லை.. முகமதுவின் அப்பா, குல்ஷானின் காதை கத்தியால் வெட்டிவிட்டார். மருமகன் மூக்கை கடிக்க.. சம்பந்தி காதை வெட்ட.. என ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார் குல்ஷான்.
இதை பார்த்து பயந்து போன அகமதுவும், அவரது அப்பாவும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். குல்ஷானை பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பந்தமாக போலீசிலும் புகார் தரப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications