கனடா பெண் போல் நடித்து.. இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் ஆபாச வீடியோக்களை பெற்று மிரட்டிய நபர் கைது!
லக்னோ: இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் பெண் போல் பேசி ஆபாச வீடியோக்களை பெற்று அவர்களை மிரட்டி வந்த ஏசி மெக்கானிக்கை போலீஸார் கைது செய்தனர்.
டெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக கனடாவில் இருந்து பேசுவதாக ஒரு பெண் ஒருவர் அறிமுகமாகி நட்பாக பழகியுள்ளார்.
அந்த சிறுமியிடம் நம்பிக்கையை பெறும் வகையில் நன்றாக பேசிய அந்த பெண் அவரிடமிருந்து அவரது ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் வாங்கியுள்ளார்.

சிறுமியிடம் பெண் போல் பேசிய ஆண்
இந்த நிலையில் ஒரு நாள் அந்த சிறுமியிடம் பெண்ணாக பேசிக் கொண்டிருந்த அந்த நபர் திடீரென தனது பெண் வேஷத்தை கலைத்துவிட்டு அந்த சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும் அந்த சிறுமியை தனது இச்சைக்கு இணங்குமாறு தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

வீடியோ
இல்லாவிட்டால் அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளத்தில் விட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி டெல்லி போலீஸிடம் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி டெல்லி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

சிறுமி தெரிவித்த விவரங்கள்
அந்த சிறுமி தெரிவித்த விவரங்களை வைத்து போலீஸார் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு நோட்டீஸ் அனுப்பி அந்த நபரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்டனர். சிறுமியை மிரட்டிய நபர் லக்னோவைச் சேர்ந்தவர் என்றும் அவர் ஒரு ஏசி மெக்கானிக் என்றும் அவரது பெயர் அப்துல் சமது என்றும் தெரியவந்தது.

வீட்டுக்கு சென்று கைது
அவரை போலீஸார் அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் கிடைத்தன. அதில் அப்துல் சமது யூடியூப் மூலம் சமூக வலைதள மோசடி வேலைகள் குறித்தும் உள்ளூரில் இருந்து கொண்டே வெளிநாட்டு எண்களை போல் அழைக்கு "Text Now" போன்ற செயலிகள் குறித்தும் அறிந்துள்ளார்.

செயலியை பயன்படுத்தி
இதையடுத்து அந்த செயலிகளைப் பயன்படுத்தி கனடாவில் இருந்து பேசும் பெண்ணாக தன்னை காட்டிக் கொண்டு இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் நட்பாக பழகி அவர்களது ஆபாச வீடியோக்களஐ பெற்று அவர்களை மிரட்டுவதையே வேலையாக கொண்டிருந்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் ஐடி
இவரது செல்போனில் இருந்து சிறுமிகளின் ஏராளமான வீடியோக்கள், போன் எண்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவர் தனது சமூகவலைதளங்களில் இணையதளத்தில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்ட அழகான பெண்ணின் படத்தை வைத்திருந்தார். இவருக்கு நிறைய இன்ஸ்டாகிராம் ஐடிகள் இருந்தன. அதனால் அவரை கண்டுபிடிப்பது சிரமத்தை தந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications