Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் 16 தொகுதி.. ‛இந்தியா’ கூட்டணியின் அரியணையை தடுத்த மாயாவதி! மீண்டும் பிரதமாகும் மோடி! எப்படி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது பிடிவாதத்தால் மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சி அமைவதை சல்லி சல்லியாக நொறுக்கி உள்ளார். மாயாவதியின் கட்சி வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகளால் உத்தர பிரதேசத்தில் 16 தொகுதிகளில் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளர்கள் நூலிழையில் பாஜகவிடம் தோற்றுள்ளனர். இந்த 16 தொகுதிகளில் ‛இந்தியா'கூட்டணி வேட்பாளர்கள் வென்றிருந்தால் மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கு அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

543 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க தேவையான 272 இடங்களில் யாரும் ஜெயிக்கவில்லை. இதனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

uttar pradesh Mayawati BSP BJP INDIA Bloc lok sabha election 2024 yogi adiyanath 2024

குறிப்பாக இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பாஜக கூட்டணிக்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. சொல்லப்போனால் மத்தியில் கூட்டணி ஆட்சியை தான் பாஜகவால் அமைக்கும் சூழல் உருவாக்கி உள்ளது.

அதாவது பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. அதோடு பாஜக கூட்டணி கட்சிகளின் வெற்றியை சேர்த்தால் பாஜகவுக்கு மொத்தம் 293 இடங்கள் உள்ளன. இதனால் மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் அதிகபட்சமாக 99 இடங்களில் வென்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 37 தொகுதியிலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், முதல்வர் ஸ்டாலினின் திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக ‛இந்தியா' கூட்டணி கட்சிக்கு மொத்தம் 234 இடங்கள் உள்ளன.

பாஜகவின் இந்த சறுக்கலுக்கு முக்கிய காரணம் உத்தர பிரதேசமாகும். இங்கு மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. கடந்த 2014ல் உத்தர பிரதேசத்தில் பாஜக 71 இடங்களிலும், 2019ல் பாஜக 62 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் பாஜக 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.‛இந்தியா' கூட்டணி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வதி அதிகபட்சமாக 37 இடங்களில் வென்றுள்ளது. இது பாஜகவை விட அதிகமாகும். அதேபோல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பிடிவாதம் மற்றும் அவரது கட்சியின் வேட்பாளர்கள் பிரித்த ஓட்டுகளால் தான் பாஜக வேட்பாளர்கள் 16 இடங்களில் நூலிழையில் ‛இந்தியா' கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி உள்ளது தெரியவந்துள்ளது. மாயாவதியின் வேட்பாளர்களால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் 11 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியின் 4 வேட்பாளர்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒரு வேட்பாளரும் தோல்வியடைந்துள்ளார். இந்த 16 தொகுதிகள் எவை அங்கு மாயாவதியின் வேட்பாளர்கள் எப்படி பாஜகவுக்கு சாதகமாக ரிசல்ட்டை மாற்றினர் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

தொகுதி - ‛இந்தியா' கூட்டணி ஓட்டு - பாஜக ஓட்டு - பகுஜன் சமாஜ் ஓட்டு - வித்தியாசம்

அக்பர்பூர் - 4,73,30,78 - 5,17,423, - 73,140 - 44,345

அலிகார் - 48,61,87 - 5,01,834 - 1,23,929 - 15,647

அம்ரோஹா - 4,47,863 - 4,76,506 - 1,64,099 - 28,670

பன்ஸ்கான் - 4,25,543 - 4,28,693 - 64,750 - 3,150

பதோஹி - 4,15,910 - 4,59,982 - 1,55,053 - 44,072

பிஜ்னூர் - 3,66,985 - 4,044,99 - 2,18,986 - 37,508

டியோரியா - 4,696,99 - 5,04,541, 45,564 - 34,842

டூமாரியான்கஞ்ச் - 4,20,575 - 4,663,303 - 81,305 - 42,728

பருஹாபாத் - 4,85,285 - 4,879,63 - 45,390 - 2,678

பதிப்பூர் சிக்ரி - 4,022,52 - 4,45,657 - 1,20539 - 43,405

ஹர்டோய் - 4,58,942 - 4,86,798 - 1,22,629 - 27,856

மிர்சாபூர் - 4,33,821 - 4,71,631 - 1,44,446 - 37,810

மிஸ்ரிக் - 4,41,610 - 4,75,016 - 1,11,945 - 33,406

புல்பூர் - 4,48,268 - 4,52,600 - 82,586 - 4,332

சாஜான்பூர் - 5,37,7339 - 5,92,718 - 91,710 - 55,379

உன்னாவ் - 5,80,315 - 6,16,133 - 72,527 - 35,818

இந்த 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற 16 பாஜக வேட்பாளர்களுக்கும், 2ம் இடம் பிடித்த பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையேயான வித்தியாசம் என்பது மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் இந்த ஓட்டு வித்தியாசத்தை விட அந்ததந்த தொகுதிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளனர். இதனால் தான் மாயாவதியால் 16 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களிடம் ‛இந்தியா' கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வீழ்ந்துள்ளது புரிகிறது.

மேலும் தொடக்கம் முதலே மாயாவதியை ‛இந்தியா' கூட்டணிக்கு கொண்டு வர காங்கிரஸ் முயன்றது. தேர்தல் தேதி அறிவிக்கும் வரை கூட மாயாவதிக்கு காங்கிரஸ் கட்சியினர் தூது விட்டனர். ஆனால் அவர் உறுதியாக மறுத்துவிட்டார். மாயாவதியின் இந்த பிடிவாதம் என்பது தற்போது மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சி அமையவிடாமலும் தடுத்துள்ளது.

ஏனென்றால் மாயாவதி ‛இந்தியா' கூட்டணிக்கு வந்திருக்கும்போது அவருக்கும் கணிசமான தொகுதிகள் வழங்கப்பட்டு இருக்கும். உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை டாப் தலித் லீடராக மாயாவதி உள்ளார். இது ‛இந்தியா' கூட்டணிக்கு கூடுதல் ஓட்டுகளை பெற்று தந்திருக்கும். அதோடு இந்த 16 தொகுதி மட்டுமின்றி வேறு சில தொகுதிகளிலும் ரிசல்ட் மாறி வந்திருக்கும். இதனால் மொத்தமாக உத்தர பிரதேசத்தை ‛இந்தியா' கூட்டணி ஸ்வீப் செய்திருக்கும்.

அதோடு பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகி இருந்தாலும் கூட ‛இந்தியா' கூட்டணி தற்போதைய 234 தொகுதிகளை விட குறைந்தபட்சம் 16 முதல் அதிகபட்சம் 20 தொகுதிகள் வரை கிடைத்திருக்கும். அப்படியென்றால் இந்தியா கூட்டணியின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை என்பது 260 முதல் 264 வரை உயர்ந்திருக்கும். அதோடு மத்தியில் ஆட்சியை பிடிக்க 12 அல்லது 8 எம்பிக்களின் உதவி தான் ‛இந்தியா' கூட்டணிக்கு தேவையாக இருந்திருக்கும். ஆனால் மாயாவதியின் பிடிவாதம் மற்றும் உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட்டது உள்ளிட்டவற்றால் தற்போது மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வருவது சல்லி சல்லியாக நொறுங்கி உள்ளது. இது ‛இந்தியா' கூட்டணி கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+