முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல்! முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் வளர்ச்சி பாதையில் உ.பி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 34 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய அமைச்சர்கள், "உ.பியின் வளர்ச்சிக்காக இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில், மெகா திட்டத்தின் 4 யூனிட்களுக்கு ரூ.326 கோடி ஊக்கத்தொகை, ஸ்ரீ சிமெண்ட், ரிலையன்ஸ் சிமெண்ட், வருண் பானங்கள். அஸ்வரா பேப்பர்ஸ் போன்ற நிறுவனங்களின் தொழில் கொள்கையில் மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் வீடு வாங்குபவர்களுக்காக அமைக்கப்பட்ட துணைக் குழுவின் அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும், நொய்டா செக்டார் 71 முதல் கிரேட்டர் நொய்டாவின் அறிவு பூங்கா வரை 15 கிமீ மெட்ரோ பாதைக்கு ஒப்புதல். என 34 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அமைச்சர்கள் கூறுகையில், "உ.பியின் வளர்ச்சிக்காக இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள் வளர்ச்சியை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா 2024ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாறும். இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். நாங்கள் பெண்களின் வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் , கடந்த 6 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான கிராமப்புற பெண்கள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்கள், 54,657 கிராம அமைப்புகள் மற்றும் 2,935 கிளஸ்டர் அளவிலான கூட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 5,94,456 சுயஉதவிக்குழுக்கள் சுழல் நிதியாக ரூ. 891.68 கோடியை வழங்கியுள்ளது. இது தவிர கடந்த 6 ஆண்டுகளில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார நோக்கங்களுக்காக ரூ.3,339 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் உள்ள பெண்களின் நிலையை மேம்படுத்தும். நாங்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கான விஷயத்தில் சமரசம் செய்துக்கொள்வதில்லை" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications