அடேங்கப்பா.. இது லிஸ்டுலயே இல்லையே! மோடி பிறந்த நாளில் போலி ரத்த தானம்! பாஜக மேயர் வீடியோவை பாருங்க
லக்னோ: மோடி பிறந்த நாள் அன்று உத்தரப் பிரதேசத்தின் மொதராபாத் மேயர், 'போலியாக' ரத்த தானம் செய்துள்ள வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள், பாஜகவினரால் கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி பாஜகவினர் இந்நாளை உற்சாகமாக கொண்டாடினர். உத்தரப் பிரதேசத்தில் மொதராபாத் பகுதியில் மோடியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ரத்ததானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பாஜக மேயர் வினோத் அகர்வால் ரத்த தானம் செய்வார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

அன்றைய தினம் மருத்துவமனைக்கு வந்த வினோத்துக்கு, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் ரத்தம் எடுக்க அவர், படுக்கையில் படுக்க வைக்கப்பட்டார். மருத்துவர் ஊசியை செலுத்த வந்தபோது, 'அதெல்லாம் வேண்டாம்' என்கிற டோனில் கையசைத்திருக்கிறார். இதனை புரிந்துக்கொண்ட மருத்துவர், ரத்தம் எடுக்காமல் தவிர்த்திருக்கிறார். பின்னர் சில வினாடிகளில் வினோத் படுக்கையிலிருந்து எழுந்து சென்றிருக்கிறார்.
ஆனால் இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகிவிட்டது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், வினோத் அகர்வால் போலியான ரத்ததானம் செய்திருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.
ரத்த தானம்: இருப்பதிலேயே மிகவும் எளிய கொடை, குருதி கொடைதான். 18 முதல் 60 வயது வரை எல்லோராலும் ரத்த தானம் செய்ய முடியும். இருப்பினும் ரத்த தானம் செய்ய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஹீமோகுளோபின் - 12.5 g/Dlக்கும் குறையாமல் இருக்க வேண்டும்
இதய துடிப்பு நிமிடத்திற்கு 50 - 100 என்கிற அளவில் இருக்க வேண்டும்.
இரத்த அழுத்தம் - சிஸ்டாலிக் 100-180 mm Hg மற்றும் டயஸ்டாலிக் 50 - 100 mm Hg என இருக்க வேண்டும்.
உடல் வெப்பநிலை - 37.50C க்கு மேல் இல்லாமல் இருக்க வேண்டும்.
ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருக்கும் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இது தவிர மேலும் சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக உடல் எடை 45 கி.கிக்கு குறைவாக இருக்க கூடாது, கடந்த ஓராண்டில் ரேபிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்றவராக இருந்தால் ரத்தம் கொடுக்க முடியாது.
In UP's Moradabad, BJP Mayor Vinod Agrawal is purportedly seen lying down to donate blood but chickens out the moment doctor prepares to draw blood during the camp to commemorate PM Narendra Modi's b'day. pic.twitter.com/ivW5jn752T
— Piyush Rai (@Benarasiyaa) September 20, 2024
அதேபோல கடந்த 6 மாதங்களில் பச்சை குத்தி இருக்கக்கூடாது, மூக்கு/காது குத்தி இருக்க கூடாது. மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை எடுத்திருந்தாலும் ரத்தம் கொடுக்க முடியாது.
குறிப்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் ரத்தம் தானம் செய்ய வேண்டும். அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் மது அருந்தியிருக்க கூடாது போன்ற நிபந்தனைகள் இருக்கின்றன.
நீங்கள் சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை முறை ரத்த தானம் செய்திருக்கிறீர்கள்? அதை சோஷியல் மீடியாவில் விழிப்புணர்வுக்காக ஷேர் செய்திருக்கிறீர்களா?
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications